பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக- எல்லையில் வாகனங்கள் நிறுத்தம்

Added : மார் 22, 2020
Share
Advertisement

மேட்டுப்பாளையம்:'கொரோனா' தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது. கேரளாவில் இருந்து, கோவைக்கு வாகனங்கள் வருவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் இருந்து கோவை வரக்கூடிய அனைத்து வழித்தடங்களிலும், சோதனை சாவடி அமைத்து, போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.காரமடை ஒன்றியம், தோலம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோபனாரி, பட்டிசாலை, மேல்பாவி வழியாகவும், வெள்ளியங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட முள்ளி ஆகிய இடங்கள் கேரளாவில் இருந்து வரும் சாலைகள் உள்ளன. இவ்விரு இடங்களில் வனத்துறை சோதனை சாவடிகள் உள்ளன. இங்கு போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள மருத்துவ குழுவினர், பரிசோதனை செய்தபின், அனுமதிக்கப்படுகின்றனர்.கோவை வடக்கு ஆர்.டி.ஓ., சுரேஷ் தலைமையிலான குழுவினர், கோபனாரி, பட்டிசாலை, முள்ளி ஆகிய இடங்களில் உள்ள சோதனை சாவடிகளை ஆய்வு செய்தனர். மேல்பாவி வனத்துறை சோதனை சாவடியில், சீலியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கார்த்திகேயன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் ஷியாமளா, லிங்கன் மற்றும் மருத்துவ குழுவினர், மருத்துவ பரிசோதனை செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X