இந்தியா

'ஊரடங்கு கிடையாது; தடை மட்டுமே!'

Added : மார் 22, 2020
Share
Advertisement

சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும்போதும், அசாதாரணமான சூழல் நிலவும்போதும், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவது வழக்கம். 144 தடை உத்தரவு பிறப்பிக்கும்போது,

அந்தந்த சூழ்நிலைகளுக்கேற்ப நிபந்தனைகள் சேர்க்கப்படும்.உதாரணமாக, பொது இடங்களில் கூட்டம் நடத்தக் கூடாது, கும்பல் சேரக் கூடாது, 4 பேருக்கு மேல் கூடி நிற்கக் கூடாது, வீட்டில் இருந்து யாரும் வெளியே வரக் கூடாது, ஊருக்குள் ரவுடிகள் வரக்கூடாது என, சூழ்நிலைக்கு தகுந்தாற்போல 144 தடை உத்தரவில் நிபந்தனைகள் சேர்க்கப்படும்.அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும், வீட்டை விட்டு யாரும் வெளியே வரக் கூடாது என்பது, முழுமையான ஊரடங்கு உத்தரவாகும்.

அதுபோன்ற சமயத்தில், உத்தரவு தளர்த்தப்படும் நேரங்களில் மட்டுமே மக்கள் வெளியே வர முடியும்.தற்போது, முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளது, பொது இடங்களில் 5 பேருக்குமேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு மட்டுமே; ஊரடங்கு உத்தரவு கிடையாது. 144 தடை உத்தரவு, நாளை 23ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.முன்னதாக, பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று 'மக்கள் ஊரடங்கு' இன்று (22ம் தேதி) முழுமையாக அனுசரிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X