இந்தியா

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள்

Added : மார் 22, 2020
Share
Advertisement

புதுச்சேரி: கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் உள்ளாட்சி துறை அதிகாரிகள், வணிகர் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.இதில், இன்று நடைபெறும் மக்கள் ஊரடங்கில், வணிகர் சங்கத்தினர் பங்கேற்று ஒத்துழைப்பு அளிப்பது, வணிகர்களுக்கு பாதுகாப்பு மற்றும் உள்ளாட்சி துறையின் மூலம் மேற்கொள்ள வேண்டிய கொரோனா விழிப்புணர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்தை தொடர்ந்து, அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதையொட்டி, வியாபாரிகள் சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினேன். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. முழுமையாக ஒத்துழைப்பு அளிப்பதாக கூறினர்.மாநில எல்லைகள், நகரம் மற்றும் கிராமங்களில் கிருமி நாசினி தெளிக்க, உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கும், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். ஒரே இடத்தில் அதிகளவில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.நகரப்பகுதியில் மக்கள் தங்கள் கைகளை சுத்தம் செய்து கொள்ள மொபைல் கழிப்பிடம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X