பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா வாகனம், ஆட்டோ ஓடாது

Added : மார் 22, 2020
Share
Advertisement

கோவை:'கொரோனா' வைரஸ் நோயை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் இன்று காலை, 7:00 முதல், இரவு, 9:00 மணி வரை, வீட்டை விட்டு யாரும் வெளியே வராமல். 'மக்கள் ஊரடங்கு' நடத்த பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதையேற்று, கோவை மாவட்டத்தில் ஆட்டோக்களும், சுற்றுலா வாகனங்களும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு ஓட்டல், மெஸ், பேக்கரிகள் இன்று ஒரு நாள் மூடப்படுகின்றன.வாகனங்கள் 'ஸ்டாப்'அனைத்திந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நலச்சங்க, மாநில இணை செயலாளர் பாலாஜி கூறுகையில், ''கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முழு ஆதரவு தரும் விதமாக, கோவை மாவட்டத்தில், 6,000 வாகனங்கள் நாளை (இன்று) இயங்காது. கடந்த ஒரு வாரமாக, 10 சதவீதம் கூட, எங்கள் வாகனங்கள் இயங்காததால், பெரும் பாதிப்பை சந்தித்துள்ளோம். ''அரசு நிதியுதவி வழங்கினால் நன்றாக இருக்கும்,'' என்றார்.இன்று மட்டும்கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சுகுமாரன் கூறுகையில், ''கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தர வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. அவ்வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள, 13 ஆயிரம் ஆட்டோக்கள் நாளை (இன்று) ஓடாது. ''23ம் தேதி முதல், அனைத்து ஆட்டோக்களும் வழக்கம்போல் இயங்கும்,'' என்றார்.ஓட்டல், பேக்கரி அடைப்புசிறு ஓட்டல், மெஸ், பேக்கரி மற்றும் அனைத்து உணவு வகை உரிமையாளர்களின் நல சங்க தலைவர் சுப்ரமணியன் கூறுகையில்,''கோவை மாவட்டத்தில், 500 பேர் எங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். ''பொதுமக்கள் நலன் கருதி, பிரதமர் மோடி வேண்டுகோளை ஏற்று, உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நாள் கடைகளை அடைக்கின்றனர். ''மறுநாள் முதல் கடைகள் வழக்கம்போல் திறக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X