பொது செய்தி

தமிழ்நாடு

வேப்பிலையுடன் வலம் வந்த அரசு பஸ்

Added : மார் 22, 2020
Share
Advertisement

பேரூர்:உலகம் முழுதும் 'கொரோனா' வைரஸ் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. மத்திய மாநில அரசுகள் சார்பில், வைரஸ் தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. கடந்த, 17ம் தேதி, மத்வராயபுரம் ஊராட்சி அலுவலகத்தில் சாணம் தெளித்து, வேப்பிலை கட்டப்பட்டது.அதுகுறித்து கேட்டபோது, இயற்கை கிருமி நாசினிகளான சாணம், வேப்பிலை மணத்தை சுவாசிக்கும்போது, விஷக்காற்று முறிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம், நமது நாளிதழில் வெளியாகி பரபரப்பானது. கிராமப்புற வீடுகளில் சாணம், வேப்பிலை, நொச்சியிலை, மஞ்சள் பயன்பாடு அதிகரித்தது.நாதேகவுண்டன்புதுார் பொதுமக்கள் மற்றும் அரசு பஸ் (எண்: 14) டிரைவர் கணேசன், 40, கண்டக்டர் ராஜேஷ்குமார், 33, இணைந்து, 'கொரோனா' வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இயற்கை கிருமி நாசினிகளை பயணிகள் சுவாசிக்கும் விதமாகவும், பஸ் முழுவதும் மஞ்சள் தெளித்து, வேப்பிலை, நொச்சியிலைகளை கட்டினர்.காந்திபுரம் வரை வேப்பிலை, நொச்சியிலை தோரணத்துடன் வலம் வந்த அரசு பஸ்சை, அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அதன் நோக்கத்தை அறிந்ததும், கிராம மக்களையும், அரசு பஸ் ஊழியர்களையும் மற்றவர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X