லாரி மோதி விபத்து: ஐ.டி., ஊழியர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி மோதி விபத்து: ஐ.டி., ஊழியர் பலி

Added : மார் 22, 2020
Share

கோவை:கோவையில், லாரி மோதியதில், ஐ.டி., ஊழியர் பலியானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கோவை, சாய்பாபா காலனி, என்.பி.சி., அலுவலர்கள் காலனியை சேர்ந்த சீனிவாசனின் மகள் பூர்ணிமா கனி, 22. சரவணம்பட்டியில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்தார். நேற்று காலை, சத்தியமங்கலம் ரோட்டில், கணபதி நோக்கி, தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.சரவணம்பட்டி செக்போஸ்ட் அருகே வந்தபோது, நிலைதடுமாறி ரோட்டில் விழுந்தார். அவ்வழியாக வந்த லாரி, பூர்ணிமா கனி மீது ஏறியது. இதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கு வந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார், சடலத்தை கைப்பற்றி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X