பொது செய்தி

தமிழ்நாடு

அச்சப்படாதீர்; அழைக்கலாம் 1077: வல்லுனர்கள் வீடியோகாலில் பேசுவர்

Added : மார் 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கோவை;''பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. 'கொரோனா' அறிகுறி தென்பட்டால், நேரடியாக மருத்துவமனைக்கு வர வேண்டியதில்லை. '1077' என்ற ஹெல்ப் லைன் நம்பரில் தொடர்பு கொண்டால், துறை சார்ந்த வல்லுனர்கள், வீடியோ காலில் விளக்கம் அளிக்க காத்திருக்கிறார்கள்,'' என, கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் தெரிவித்தார்.சீனாவில் ஏதோ ஒரு மூலையில் உருவான, 'கொரோனா' என்கிற அரக்கன், நம்மை என்ன செய்யப்போகிறான் என, வளர்ந்து வரும் நாடுகள் மட்டுமல்ல; வளர்ந்த நாடுகளுமே நினைத்துக் கொண்டிருந்தன. இன்று, 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, தனது வீரியத்தால், மக்களை முடக்கிக் கொண்டிருக்கிறது,
'கொரோனா' வைரஸ்.இன்று வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. விழிப்போடு செயல்பட்டால் பரவுவதை தடுத்து, மேற்கொண்டு பரவாமல் கட்டுப்படுத்த முடியும். கோவை மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தேவையான வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் கூறியதாவது:'கொரோனா' வைரஸ் யாரிடமிருந்து பரவுகிறது என்பதை கண்டறிந்து, நோய் தொற்றை பரவாமல் தடுப்பதற்கான முயற்சியே, இது. அரசு கூறிய அறிவுரையை ஏற்று, மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். யாரும் வெளியே வர வேண்டாம்; தனிமைப்படுத்திக் கொள்ளவும். நோய் தொற்று பரவத் துவங்கினால், கட்டுப்படுத்துவது கடினமானதாகி விடும்.கூடுதல் கவனம்குழந்தைகள் வயதானவர்கள், சர்க்கரை வியாதி, ரத்தக்கொதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், 'டயாலிசிஸ்' செய்து கொண்டிருப்பவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் உள்ளிட்டோருக்கு நோய் தொற்று எளிதில் பரவி விடும் என்பதால், கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்.சிறப்பு குழு 'ரெடி'மருத்துவ துறையில் அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மருந்துகள் துறை, 'அனஸ்டீசியா', நுரையீரல், சமூக நலத்துறை, 'மைக்ரோ பயாலஜிஸ்ட்', 'வைரலாஜிஸ்ட்' போன்ற அனைத்து துறைகளையும் இணைத்து, சிறப்பு குழு தயார்படுத்தியுள்ளோம்.
இக்குழுவினர், எத்தனை பேர் வந்தாலும், அவர்களை முறையாக கையாண்டு, நோய் தொற்று இருக்கிறதா, இல்லையா என்பதை அறிந்து, சிகிச்சை அளிப்பர். இக்குழுவினரை ஒருங்கிணைத்து, தேவையான உபகரணங்கள் ஏற்பாடு செய்து கொடுப்பது எங்களது பணி. சோதனை சாவடி மற்றும் வெளியூரில் இருந்து வருபவர்களை, மாவட்ட சுகாதார துறையினர் கண்காணிப்பர்.ஹெல்ப் லைன்-1077மாவட்டம் வாரியாக, 1077 என்ற 'ஹெல்ப் லைன்' எண் கொடுக்கப்பட்டுள்ளது.
அறிகுறி இருப்பவர்கள், இந்த எண்ணில் தொடர்பு கொண்டால், துறை சார்ந்த வல்லுனர்களே வீடியோ காலில் தொடர்பு கொண்டு, சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பர். தேவைப்பட்டால், பிரத் யேக வாகன வசதி ஏற்படுத்தி, சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-மார்-202018:53:46 IST Report Abuse
Ram Pollachi நன்றி!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X