நடுரோட்டில் மின்கம்பம்: போக்குவரத்துக்கு இடையூறு

Added : மார் 22, 2020
Share
Advertisement
 நடுரோட்டில் மின்கம்பம்:  போக்குவரத்துக்கு இடையூறு

பொங்கலுார்:நடுரோட்டில் உள்ள மின்கம்பத்தை அகற்று மாறு, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பொங்கலுார், நாச்சிபாளையம் ஊராட்சி ரங்கம்பாளையத்தில் நடுரோட்டில் மின்கம்பம் உள்ளது. இந்த மின் கம்பத்தால் அவ்வீதியில் கார், ஆட்டோ, வேன் உட்பட நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாது.இந்த மின் கம்பத்தை ஓரமாக நட வேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக மின் வாரியத்துக்கு, தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த மின்கம்பத்தை ஓரமாக நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X