பொது செய்தி

தமிழ்நாடு

'வைரஸ் தடுப்பில் கவனம் செலுத்துங்க!' பின்னலாடை நிறுவனங்களுக்கு அட்வைஸ்

Added : மார் 22, 2020
Share
Advertisement

திருப்பூர்:நிறுவனங்கள், வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என, அனைத்து பின்னலாடை தொழில் அமைப்பு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து, அனைத்து பின்னலாடை தொழில் அமைப்பு கூட்டம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் நேற்று நடந்தது.சைமா சங்க தலைவர் ஈஸ்வரன், பொதுச்செயலாளர் பொன்னுசாமி, ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், பொதுச்செயலாளர் விஜயகுமார், நிட்மா தலைவர் ரத்தினசாமி, சாய ஆலை சங்க பொதுச்செயலாளர் முருகசாமி, தொழில் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, டீமா தலைவர் முத்துரத்தினம், டெக்பா சங்க தலைவர் ஸ்ரீகாந்த் உட்பட ஆடை உற்பத்தி, ஜாப்ஒர்க் சங்கநிர்வாகிகள் பங்கேற்று, விவாதித்தனர்.அனைத்து நிறுவனங்களும், வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, ஆடை உற்பத்தியை தொடரப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.உடல் பரிசோதனை செய்து, வைரஸ் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்தபின்னர் மட்டுமே புதிய தொழிலாளரைபணி அமர்த்த வேண்டும். நிறுவனங்களை கிருமி நாசினி பயன்படுத்தி துாய்மை செய்யவேண்டும்.அனைத்து தொழிலாளரையும் முக கவசம் அணியச்செய்ய வேண்டும். நிறுவனங்கள், தங்கும் விடுதி, கழிவறைகளை கிருமி நாசினி பயன்படுத்தி தொடர்ச்சியாக துாய்மை செய்யவேண்டும். கிருமி நாசினி திரவம் பயன்படுத்தி, கை கழுவச் செய்ய வேண்டும்.இருமும்போதும், தும்மும்போதும் கைக்குட்டை அல்லது கைகளால் முகத்தை மூடிக்கொள்ளவேண்டும். தொண்டைவலி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால், அந்த தொழிலாளரை தனிமைப்படுத்தி, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.தினமும் பணிக்கு வரும்போதும், பணி முடித்துச் செல்லும்போதும், தொழிலாளர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யவேண்டும். தொழிலாளர்களுக்கு அடிக்கடி மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும்.கை கழுவும் வழிமுறைகள்; வைரஸ் தடுப்புக்கு செய்ய வேண்டியவை; செய்யக் கூடாதவை எவை என்கிற விவரங்களை பட விளக்கத்துடன், தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒட்டி வைக்கவேண்டும்.தொழிலாளர் மத்தியில் வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X