பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் திருத்தம்: மத்திய அமைச்சருக்கு ஏ.இ.பி.சி., தலைவர் முறையீடு

Added : மார் 22, 2020
Share
Advertisement

திருப்பூர்:ஆயத்த ஆடை ஏற்றுமதி துறையை வளர்ச்சி பெறச் செய்யும்வகையில், வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் திருத்தம் செய்யவேண்டும் என, ஏ.இ.பி.சி., தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஸ்கோயலுக்கு, சக்திவேல் அனுப்பியுள்ள கடிதம்:கொரோனா வைரஸால், இந்திய ஆடை உற்பத்தி துறை நெருக்கடி நிலையை எதிர்கொண்டுவருகிறது. ஆடை தயாரிப்புக்கு தேவையான துணி, அக்சசரீஸ்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய முடிவதில்லை.அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பிராண்டட் நிறுவனங்கள், ஆடை தயாரிப்புக்கு வழங்கிய ஆர்டர்களை ரத்து செய்கின்றனர். வெளிநாட்டு சந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட ஆடைகள் தேக்கமடைந்துள்ளதால், ஆடை உற்பத்தி நிறுவனங்களின் முதலீடுகள் முடங்கியுள்ளன.இ.பி.சி., (எக்ஸ்போர்ட் புரமோஷன் சர்ட்டிபிகேட்) - ஏ.ஏ.எஸ்., (அட்வான்ஸ் ஆதரைசேஷன் ஸ்கீம்) மற்றும் இ.பி.சி.ஜி., (எக்ஸ்போர்ட் புரமோஷன் கேப்பிட்டல் கூட்ஸ்) திட்டங்களில், இயந்திரம், துணி, அக்சசரீஸ்கள் இறக்குமதி செய்வதில் இடையூறுகள் ஏற்படுகின்றன.இ.பி.சி., திட்டத்தில் வழங்கப்படும் உரிம மதிப்பின் செல்லுபடியாகும் காலத்தை, ஆறு மாதம் நீட்டிக்கவேண்டும்.ஏ.ஏ.எஸ்., - இ.பி.சி.ஜி., திட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளவேண்டும். இ.பி.சி.ஜி., திட்டத்தில் இறக்குமதி வரி விலக்கு பெறும் தொகைக்கு நிகரான ஆறு மடங்கு ஏற்றுமதியை, அடுத்த ஆறு ஆண்டுகளில் மேற்கொள்ளவேண்டியுள்ளது. 6க்கு பதில் 4 மடங்காகவும்; ஆறு ஆண்டுகளுக்குபதில், 8 ஆண்டுகளாகநிர்ணயிக்கவேண்டும்.வங்கி கடன் பெறுவதற்கான விதிமுறைகளை தற்காலிகமாக தளர்த்த வேண்டும். கடன் திருப்பி செலுத்துவதற்கு வழங்கும் அவகாசத்தை நீட்டிப்பு செய்யவேண்டும். வெளிநாட்டு வர்த்தக கொள்கையில், திருத்தங்கள் செய்யவேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X