பொது செய்தி

தமிழ்நாடு

'நிப்ட்-டீ' கிரிக்கெட் போட்டி வரும், 31 வரை ஒத்திவைப்பு

Added : மார் 22, 2020
Share
Advertisement

திருப்பூர்:'கொரோனா' முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 'நிப்ட்--டீ' கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.பின்னலாடை நிறுவனங்களுக்குள் நல்லுறவை வளர்க்கும் வகையிலும், தொழிலாளரைஉற்சாகப்படுத்துவதற்காகவும், திருப்பூர், முதலி பாளையம் நிப்ட்---டீ கல்லுாரி ஆண்டுதோறும், கிரிக்கெட் போட்டி நடத்தி வருகிறது.நடப்பு ஆண்டுக்கான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி, கடந்த பிப்ரவரி 9ல் துவங்கியது. மொத்தம் 23 பின்னலாடை அணிகள் பங்கேற்றுள்ளன. வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.இதுவரை மொத்தம் ஆறு நாட்கள், 12 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இன்று, எஸ்.ஆர்.ஜி., அப்பேரல்ஸ் - - ரிதம் நிட் இந்தியா; அனுகிரஹா பேஷன் -- பெஸ்ட் கார்பரேஷன் நிறுவன அணிகள் மோதும் போட்டி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.கொரோனாவை கட்டுப்படுத்த அரசு கட்டுப்பாடுகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, இன்று நடைபெற இருந்த கிரிக்கெட் ஒத்திவைக்கப்பட்டுள்ளது; வரும் 31ம் தேதி வரை போட்டிகள் எதுவும் நடத்தப்படாது; வைரஸ் பாதிப்புகள் நீங்கியபின் கிரிக்கெட் போட்டி நடத்தப்படும் என கல்லுாரி நிர்வாகம்அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X