பொது செய்தி

தமிழ்நாடு

முக கவசம் வழங்குவதில் ஓரவஞ்சனை: போக்குவரத்து ஊழியர்கள் குற்றச்சாட்டு

Added : மார் 22, 2020
Share
Advertisement

திருப்பூர்;திருப்பூரில் அரசு பஸ் டிரைவர், நடத்துனருக்கு முக கவசங்கள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பொது போக்குவரத்து வாகனங்களை இயக்குவதால் அரசு பஸ் டிரைவர், நடத்துனர்களுக்கு முககவசம் வழங்க வேண்டும் என தொடர்ந்து தொழிலாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், கோவை கோட்டத்தில் பணியாற்றும், 12 ஆயிரம் ஊழியர்களுக்கு 'முக கவசம்' வழங்கப்படும் என கோவை கோட்ட வணிகப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.அதன்படி, திருப்பூர் மண்டலத்துக்கு, 1,300 முக கவசம் தருவிக்கப்பட்டது. திருப்பூர், காங்கயம் ரோடு, டிப்போ -2க்கு, 380 முக கவசம் வழங்கப்பட்டது.நேற்று முன்தினம் இரவு முதல் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. நேற்று மதியம் பணிக்கு வந்த டிரைவர், நடத்துனருக்கு முக கவசம் வழங்கப்படவில்லை என தொழிலாளர் குற்றம்சாட்டினர்.டிரைவர், நடத்துனர் கூறுகையில், 'காலையில் பணிக்கு வந்த ஊழியருக்கு பெயரளவுக்கு, 200 முக கவசங்களை மட்டும் கொடுத்துள்ளனர். மதியம் பணிக்கு வந்து முக கவசம் கேட்டால், முடிந்து விட்டதாக சாக்குபோக்கு சொல்கின்றனர். அனைத்து தரப்பு பயணிகளோடு பயணிக்கும் எங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முக கவசம் வழங்க வேண்டும்,' என்றனர்.டிப்போ - 2 கிளை மேலாளர் ஆறுமுகம் கூறுகையில், 'எங்கள் டிப்போவில், 190 டிரைவர், 190 நடத்துனர்கள் பணிபுரிகின்றனர். முதல்கட்டமாக, 250 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுவருகிறது,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X