பொது செய்தி

தமிழ்நாடு

என்.எச்., ரோட்டிலுள்ள கடை இன்று அடைக்க அறிவுறுத்தல்

Added : மார் 22, 2020
Share
Advertisement

பல்லடம்:'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, பிரதமர் மோடி அறிவுறுத்தியதன்படி, தொழில் நிறுவனத்தினர் சிலர், தாமாகவே முன்வந்து, விடுமுறை அறிவித்து வருகின்றனர்.பல்லடத்தில் இன்று அனைத்து வணிக நிறுவனங்கள், மற்றும் கடைகள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்க, பல்லடம் வியாபாரிகள் சங்கம் ஒத்துழைப்பு வழங்கி உள்ளது. பேக்கரி, ஓட்டல்கள் உள்ளிட்டவற்றையும் மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.நகராட்சி கமிஷனர் கணேசன் கூறுகையில், 'தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால், பெரும்பாலான வெளியூர் மக்கள் பல்லடம் வழியாக செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள், நெடுஞ்சாலையில் உள்ள பேக்கரி, ஓட்டல்களை பயன்படுத்துகின்றனர். வைரஸ் பரவும் அபாயம் உள்ளது.தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேக்கரிகள், கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கு நாளை (இன்று) விடுமுறை அறிவித்து, அரசின் தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இதுகுறித்து கடை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X