பொது செய்தி

தமிழ்நாடு

'காய்ச்சலின் தன்மையை உறுதி செய்யுங்க!' தனியார் டாக்டர்களுக்கு அறிவுரை

Added : மார் 22, 2020
Share
Advertisement

திருப்பூர்;எவரேனும் தீவிர காய்ச்சல், சளி போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க தனியார் டாக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், 'கொரோனா' நோய் தடுப்பு நடவடிக்கைதீவிரமடைந்துள்ளது. நோய் பாதிப்பு இல்லையெனினும், முன்னெச்சரிக்கையாக மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதேசமயம், பலரும் வைரஸ்,​​ பாக்டீரியா காரணமாக சளியால் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். இதனால், எவரேனும் தீவிர காய்ச்சல், சளி போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, தனியார் டாக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'வைரஸ் காரணமாக மூக்கு, தொண்டைப் பகுதியில் ஏற்படும் சளி, மருந்துகள் ஏதுமின்றி தானாகவே சரியாகி விடும். மார்புச்சளி, ஒவ்வாமைச் சளி ஆகியவற்றுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது.தற்போது, கொரோனா பரவல் காரணமாக, தனியார் மருத்துவ மனை களில் சிகிச்சை பெறும் நோயாளிகள் கண்காணிக் கப்பட்டு வருகின்றனர். தீவிர காய்ச்சல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், அந்தந்த பகுதி சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தனியார் டாக்டர்கள் காய்ச்சலின் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X