பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமர் உதவித்தொகை திட்டம் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

Added : மார் 22, 2020
Share
Advertisement

அவிநாசி:பாரத பிரதமரின் உதவித் தொகை பெற, விவசாயிகளுக்கு சிறப்பு முகாம் அமைக்கப்படுகிறது.இது குறித்து, அவிநாசி வேளாண் துறையினர் கூறியதாவது:அவிநாசி வட்டார விவசாயிகளில், 10 ஆயிரம் பேர் வரை, பிரதமரின், 6,000 ரூபாய் உதவித் தொகை பெற விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் பலர் நிவாரண தொகை பெறாமல் உள்ளனர். அவர்களின் ஆதார் அட்டையில் உள்ள பெயர் பொருந்தியிருந்தால் மட்டுமே, உதவித்தொகை பெற முடியும். இதுவரை நிதியுதவி பெறாத விவசாயிகளுக்கான சிறப்பு முகாம், வரும், 23ம் தேதி அவிநாசி வேளாண் துறை அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. இதில், குறைகள் களையப்பட்டு, உதவித்தொகை பெற ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.விவசாயிகள், தங்கள் ஆதார் அட்டை, வங்கி பாஸ் புத்தகம், சிட்டா நகல் ஆகியவற்றுடன் அவிநாசி வேளாண் துறை அலுவலகத்திற்கு வர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X