காளியப்பா நகரில் ஆக்கிரமிப்பால் அவதி| Dinamalar

காளியப்பா நகரில் ஆக்கிரமிப்பால் அவதி

Added : மார் 22, 2020
Share

திருப்பூர்:நல்லுார் அருகே காளியப்பா நகரில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்பால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.திருப்பூர் மாநகராட்சி, நல்லுார் மண்டலத்துக்கு உட்பட்டது காளியப்பா நகர். அங்குள்ள முதல் வீதியில், ரோடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அப்பகுதியில் உள்ள சிலர், ரோட்டில் மரம் மற்றும் செடிகளை வளர்க்கின்றனர்.சிலர் சட்டவிரோத தண்ணீர் இணைப்பை பெற்று, ரோட்டை ஆக்கிரமித்து செடி வளர்க்கின்றனர். இதனால், வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, முதல் வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X