பொது செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன்' பயன்படுத்தலாமே! நிறுவனங்கள் வேண்டுகோள்

Added : மார் 22, 2020
Share
Advertisement

திருப்பூர்:பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நம் நாட்டிலும் சில இடங்களில் பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஒட்டு மொத்தமாக மக்கள் அதிகம் கூடுமிடங்களில் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது என்பதால், இதைத் தவிர்க்கும் வகையில் அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சேம நல நிதி நிறுவனம் தனது உறுப்பினர்களுக்கு, மத்திய அரசின் 'உமாங்' செயலி மூலம், பிராவிடண்ட் பண்ட் குறித்த நடைமுறைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. பல்வேறு வங்கிகள், மொபைல் போன் நிறுவனங்களும், வாடிக்கையாளர்கள் தாங்கள் பெறும் சேவைக்காக வங்கி கிளை மற்றும் அலுவலகங்களுக்கு நேரடியாக செல்வதை தவிர்க்கவும், சேவைகளை பெற ஆன்லைன் முறையைப் பின்பற்றவும் வேண்டுகோள் விடுத்துள்ளன. இது குறித்து நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., தகவல்களை அனுப்பியுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X