பொது செய்தி

தமிழ்நாடு

மானிய தொழில் கடன் திட்டம் மாநிலத்தில் திருப்பூர் முதலிடம்

Added : மார் 22, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில், வருடாந்திர கடன் திட்ட அறிக்கை தயாரிப்பில், 58 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.'நபார்டு' வங்கி உதவியுடன், மாவட்ட முன்னோடி வங்கிகள் சார்பில், வருடாந்திர கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.விவசாயம், கல்வி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி, ஏற்றுமதி வளர்ச்சி, வீட்டுவசதி, மின்மேம்பாடு என, பல்வேறு தலைப்புகளில், கடன் வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது. வரும் நிதியாண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை, திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி வெளியிட்டுள்ளது.சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு, 7,435 கோடி; விவசாயத்துக்கு, 3,349 கோடி; மின் மேம்பாட்டுக்கு, 536 கோடி; ஏற்றுமதி மேம்பாட்டுக்கு, 452; கல்வித்துறைக்கு, 205; வீட்டு வசதிக்கு, 208; சமூக உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு, 32.50 கோடி; இதர கடன்களுக்கு, 304 என, 12 ஆயிரத்து, 522 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.கடந்த, ஐந்து ஆண்டுகளில், திருப்பூர் மாவட்டத்துக்கான கடன் திட்ட அறிக்கையில், 58 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், கடன் இலக்கை மிஞ்சும் அளவுக்கு, அதிக அளவு கடன் வழங்கப்பட்டுள்ளது.கடந்த, 2015-16ல், 8,031 கோடி; 2016-17 ல் 8,917 கோடி; 2017-18 ல், 10 ஆயிரத்து, 578 கோடி; 2018 -19 ல், 11 ஆயிரத்து, 502 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில், 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரிகள் கூறுகையில்,'வரும் நிதியாண்டுக்கு, மானியத்துடன் கூடிய தொழிற்கடன் திட்டத்தில், மாநிலத்திலேயே அதிகபட்சமாக, திருப்பூர் மாவட்டத்தில் கடன் வழங்கப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X