தமிழ்நாடு

'காக்க, காக்க... வருமுன் காக்க!' மகளிர் குழு மூலம் முக கவசம் விற்பனை : முதல்கட்டமாக, 10 ஆயிரம் வந்தாச்சு

Updated : மார் 22, 2020 | Added : மார் 22, 2020
Share
Advertisement
 'காக்க, காக்க... வருமுன் காக்க!' மகளிர் குழு மூலம் முக கவசம் விற்பனை :  முதல்கட்டமாக, 10 ஆயிரம் வந்தாச்சு

திருப்பூர்:மாவட்ட மகளிர் திட்டம் சார்பில், பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில், மருத்துவ குணம் மிக்க, முக கவசம் விற்பனை நேற்று முதல் துவங்கியது.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம், 'கொரோனா' வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. ரயில்வே ஸ்டேஷன் நீங்கலாக, மற்ற பகுதிகளில், நோய் தடுப்பு நடவடிக்கை முழுமையாக நடந்து கொண்டிருக்கிறது.
நுாற்றுக்கணக்கான வெளி மாநில இளைஞர்கள் வந்து செல்லும் ரயில்வே ஸ்டேஷனில், முறையான பரிசோதனை, பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை. மாவட்டத்தில், கிருமி நாசினி திரவம் மற்றும் முகக கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக, மகளிர் திட்டம் மூலம், மருத்துவ குணம் மிகுந்த முக கவசம் வாங்கி விற்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மாவட்ட மகளிர் திட்ட பிரிவின் ஏற்பாட்டில், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முதல், முக கவசம் விற்பனை துவங்கியுள்ளது.
மகளிர் திட்ட அலுவலர் கோமகன் கூறியதாவது:மருத்துவ குணம் மிகுந்த, மூன்றடுக்கு துணியால் தயாரிக்கப்பட்ட முக கவசம், விற்பனைக்கு வந்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து வாங்கி, மாவட்டம் முழுவதும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.
முதல்கட்டமாக, கலெக்டர் அலுவலகத்தில் விற்பனை துவங்கியுள்ளது.மாநகராட்சி அலுவலக மாவட்ட மக்களும், கிராமப்புற மக்களும், மகளிர் குழுவினர் விற்கும், முகக்கவசங்களை வாங்கி பயன்படுத்தலாம்.முதல்கட்ட விற்பனைக்காக, 10 ஆயிரம் முகக்கவசங்கள் மாவட்டத்துக்கு தருவிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X