சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' வதந்'தீ' அவிநாசியில் பரபரப்பு

Added : மார் 22, 2020
Share
Advertisement

அவிநாசி:அவிநாசியில், நேற்று கொரோனா பீதி பரவியதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட, மடத்துபாளையம் பகுதியில் வசிக்கும் இரு பெண்கள், கோவை சாய்பாபா கோவிலுக்கு சென்று திரும்பியுள்ளனர். சளி, காய்ச்சலால் அவதிப்பட்ட அவர்களுக்கு, கொரோனா வைரஸ் தாக்கியிருக்கலாம் என்ற தகவல் வேகமாக பரவியது. இதனால், அப்பகுதியில் பீதி நிலவியது.தகவலறிந்த அவிநாசி பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கருப்புசாமி, அவர்களை அவிநாசி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினார். மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு, சாதாரண சளி, இருமல்தான்; அச்சப்பட தேவையில்லை' என, கூறி அனுப்பி வைத்தனர். இதனால், அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X