பொது செய்தி

தமிழ்நாடு

அரைவேக்காடு உணவுக்கு தடை அதிகாரி கடும் எச்சரிக்கை

Added : மார் 22, 2020
Share
Advertisement
 அரைவேக்காடு உணவுக்கு தடை அதிகாரி கடும் எச்சரிக்கை

அவிநாசி:ஓட்டல்களில் அரைவேக்காடு உணவு பதார்த்தங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க கூடாது' என, உணவு பாதுகாப்பு துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.உலக மக்களை உலுக்கியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அனைத்து துறை அலுவலர்களும், உஷார்படுத்தப்பட்டுள்ளனர். பெரிய ஓட்டல்கள், உணவு விடுதிகளில், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சமைத்து வழங்கப்படும் உணவில் சுத்தம், சுகாதாரம் காக்கப்பட வேண் டும் என்ற அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு, நன்கு காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை மட்டுமே குடிப்பதற்கு வழங்க வேண்டும். உணவு பதார்த்தங்களை அரைவேக்காட்டுடன் சமைத்து வழங்கக்கூடாது. அவர்கள் உண்ட பின், கை கழுவுவதற்கு சோப்பு மற்றும் தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வழங்கப்பட்டு, இதுதொடர்பான அறிவிப்பு அடங்கிய நோட்டீசை ஓட்டல்களில் ஒட்டி வைக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X