பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' விழிப்புணர்வில் மாணவர்கள்: சபாஷ் சொன்ன பொதுமக்கள்

Added : மார் 22, 2020
Share
Advertisement

அவிநாசி:அவிநாசி அருகே பள்ளி மாணவர்கள், தாங்களாகவே முன்வந்து கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு பணி மேற்கொண்டனர்.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில், அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதுதொடர்பான விழிப்புணர்வு, பொதுமக் கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி யில் மாணவி அனீஸ் பாத்திமா, ஜெயலட்சுமி, தமிழ்ச்செல்வன், கவின், கோபிகா, பஹுமா பர்வீன் ஆகியோர் இணைந்து, திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள, காமாட்சியம்மன் நெசவாளர் காலனியில், சூர்யா நகர் முழுக்க விழிப்புணர்வு பணி மேற்கொண்டனர்.விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கியதோடு, கை கழுவும் முறை குறித்து செய்முறை விளக்கமளித்தனர். மாணவர்களின் இச்செயலை, பொதுமக்கள் பாராட்டினர். இதேபோல், அவிநாசி டாக்டர் அப்துல் கலாம் அக்னி துளிர்கள் அறக்கட்டளை சார்பில், அவிநாசி, நம்பியாம் பாளையம், செம்பியநல்லுார், முறியாண்டம் பாளையம் மற்றும் வேலாயுதம்பாளையம் ஊராட்சி பகுதிகளில் விழிப்புணர்வு பணி மேற்கொண்டனர்.அறக்கட்டளை தலைவர் பிரேமானந்தம், செயலாளர் சாகுல் அமீது மற்றும் உறுப்பினர்கள் இப்பணியை மேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X