சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தினசரி மார்க்கெட் இடமாற்றம் கண்டித்து அரை நிர்வாண போராட்டம்

Added : மார் 22, 2020
Share
Advertisement
 தினசரி மார்க்கெட் இடமாற்றம் கண்டித்து அரை நிர்வாண போராட்டம்

திருப்பூர்:தினசரி மார்க்கெட்டைக் காலி செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மேயர் தலைமையில் அரை நிர்வாண போராட்டம் நடந்தது. ஏழு மணி நேரம் நடந்த போராட்டத்தால் நேற்று பெரும் பரபரப்பு நிலவியது.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே, மாநகராட்சிக்குச் சொந்தமான தினசரி மார்க்கெட் 400க்கும் மேற்பட்ட கடைகளுடன் உள்ளது. இந்த இடத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நவீன வசதிகளுடன் புதிய மார்க்கெட் வளாகம் அமைக்கப்படவுள்ளது.இதற்காக, கடைகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தற்காலிகமாக காட்டன் மார்க்கெட் வளாகத்தில் 200 கடைகள் அமைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 5:30 மணியளவில் மார்க்கெட் வளாகத்தை இடித்து அகற்றும் பணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் வந்தனர்.இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னாள் மேயர் செல்வராஜ் மற்றும் தி.மு.க., வினர் திரண்டனர். அதிகாரிகள் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன், எம்.பி., சுப்பராயனும் பேச்சு நடத்தினர். அதில், வியாபாரிகள் தரப்பில், உரிய வசதிகளுடன் மாற்று இடமும், புதிய வளாகத்தில் கடைகளும் வழங்கப்படும் என அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கொரோனா பரவல் பிரச்னை உள்ளதால், மார்க்கெட் கடைகள் அகற்றுவது குறித்து, அனைத்து கட்சியினருடன் ஆலோசனை நடத்திய பின், நடவடிக்கை எடுப்பது என இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இதனால், பகல் 1:00 மணியளவில் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X