பொது செய்தி

தமிழ்நாடு

33 ஊராட்சிகளில் 'ஆர்.ஓ., பிளான்ட்': இனி, சுத்தமான குடிநீர் கிடைக்கும்

Added : மார் 22, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், 11 ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 33 ஊராட்சிகளில், 2.66 கோடி ரூபாய் மதிப்பில், 'ஆர்.ஓ.,' பிளான்ட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.தமிழக அரசு, கிராமப்புற மக்களுக்கு, பாதுகாப்பான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை துவக்கியுள்ளது. முதல்கட்டமாக, ஒன்றியத்துக்கு, இரண்டு ஊராட்சிகளை தேர்வு செய்து, 'ஆர்.ஓ., பிளான்ட்' அமைக்கும் பணி நடந்து வருகிறது.திருப்பூர் ஒன்றியத்தில், மங்கலம் மற்றும் பெருமாநல்லுார் ஊராட்சிகளில், தலா, 9.99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தலா, 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட, சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.அவிநாசி ஒன்றியத்தில், சேவூர், தெக்கலுார், பழங்கரை ஊராட்சிகள்; காங்கயத்தில், பழையகோட்டை, பொத்தியபாளையம் ஊராட்சிகள்; பல்லடம் ஒன்றியத்தில், அனுப்பட்டி, கரடிவாவி, மல்லேகவுண்டம்பாளையம் ஊராட்சிகள்.ஊத்துக்குளியில், செங்கப்பள்ளி, கருமஞ்சிறை ஊராட்சிகள்; வெள்ளகோவிலில், லக்கமநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம் ஊராட்சிகளில், தலா, இரண்டு 'ஆர்.ஓ.,' பிளான்ட் அமைக்கப்படுகிறது.இங்கு, 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளான்ட், 7.93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள் கூறுகையில்,' முதல்கட்டமாக, 33ஊராட்சிகளில், 'ஆர்.ஓ.,' பிளான்ட் அமைகிறது. விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X