பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா வைரஸ் தடுப்பில் 'கோட்டை': ரயில்வே ஸ்டேஷனில் அதிகாரிகள் அசட்டை

Added : மார் 22, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.புது மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் ஆகியவற்றில் மருத்துவ மற்றும் சுகாதார குழுவினர் முகாமிட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.அவ்வகையில் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் மருத்துவ குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் முதல் பிளாட்பாரத்தில் சென்னை, பெங்களூரு மற்றும் வட மாநிலங்களிலிருந்து வரும் ரயில்களும், இரண்டாவது பிளாட்பாரத்தில் கேரளா மற்றும் கோவையிலிருந்து வரும் ரயில்களும் நின்று செல்கின்றன. திருப்பூர் வந்து சேரும் இரு மார்க்கமான ரயில்களிலும் நுாற்றுக்கணக்கானோர் இங்கு வந்து இறங்குகின்றனர்.ஆனால் இங்கு முகாமிட்டுள்ள மருத்துவ குழுவினர் ஒரேயொரு காய்ச்சல் கண்டறியும் கருவியைக் கொண்டு, நுாற்றுக்கணக்கான பயணிகளை சோதிப்பது சிரமமாக உள்ளது. பெயரளவுக்கு மட்டுமே இந்த பரிசோதனை நடக்கிறது.எனவே, தனிக்கவனம் செலுத்தி மருத்துவ குழுவி னர் செயல்பட வேண்டும். இல்லையெனில் திருப்பூரில் மேற்கொள்ளப்படும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை அனைத்துமே அர்த்தமற்றதாகி விடும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X