ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் அமலாக்க துறை விசாரணைக்கு ஆஜர்

Updated : மார் 22, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

மும்பை: தனியார் துறையைச் சேர்ந்த,'யெஸ் பேங்க்' நிறுவனர் ராணா கபூர் மீதான, சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், 'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனர், நரேஷ் கோயல், நேற்று அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரானார்.



latest tamil news



ராணா கபூர், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு, 550 கோடி ரூபாய் கடன் அளித்து, பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த கடன், வாராக் கடனாக மாறிஉள்ளது. இது தொடர்பாக, கடந்த, 18ம் தேதி விசாரணைக்கு வருமாறு, நரேஷ் கோயலுக்கு, அமலாக்கத் துறை, 'சம்மன்' அனுப்பியிருந்தது. ஆனால், 'உடல் நலம் சரியில்லை' என கூறி, அன்று நரேஷ் கோயல் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, மும்பை அமலாக்கத் துறை அலுவலகத்தில், நரேஷ் கோயல் நேற்று ஆஜரானார். அவரிடம், ராணா கபூருக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


latest tamil news



ஏற்கனவே, நரேஷ் கோயல் மீது, சட்ட விரோத பணப் பரிமாற்றம், அன்னியச் செலாவணி விதிமீறல் தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. நிதி நெருக்கடியால், 2019, ஏப்ரலில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மூடப்பட்டது.


latest tamil news



அதற்கு முன், அதன் தலைவர் பதவியில் இருந்து நரேஷ் கோயல் விலகினார். அவர் மீது, வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களில் முதலீடு செய்தது தொடர்பான வழக்குகள் உள்ளன.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,இந்தியா
22-மார்-202013:42:16 IST Report Abuse
Hari அந்நாள்பங்குதாரர் இந்நாள் தலைவராக இருந்த ரானாகபூர் ,மற்றும் இதுக்கு துணைபோன பாகிஸ்தானின் உதவியாளன் இந்தியா பணம் அச்சடிக்கும் இயந்திரத்தை கொடுத்த இந்தியா அப்போதைய நிதி மந்திரி, ஒரே எண்ணில் பல வரிசைல 1000 ரூபாய்களை 14 லட்சம் கோடிகளை அச்சடித்து ,அதை எஸ் பேங்க் மூலம் புழக்கத்தில் விட்டு நல்லபணமாக மாற்றிய எஸ் பேங்க், இதை வெளியே சொல்லுவேன் என சொன்ன முன்னாள் எஸ் பேங்க் தலைவரை 2008 ல் .. ஒழித்த அந்த கும்மலையும் விசாரிங்க மோடி அய்யா.
Rate this:
Share this comment
Cancel
sahayadhas - chennai,இந்தியா
22-மார்-202010:28:11 IST Report Abuse
sahayadhas போதா குறைக்கு தெற்கே நுழைய பாக்குறானுங்க.
Rate this:
Share this comment
Cancel
sahayadhas - chennai,இந்தியா
22-மார்-202010:27:28 IST Report Abuse
sahayadhas பெரிய களவானி எல்லாம் வடக்கேகே தான் இருகானுங்க போல..
Rate this:
Share this comment
Muruga Vel - Mumbai,இந்தியா
22-மார்-202014:06:44 IST Report Abuse
 Muruga Velசிவகங்கை சீமான் … நிதி குழுமம் … ஆந்திரா ரெட்டிங்க.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X