பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை; மாநில எல்லை மூடல்!

Added : மார் 22, 2020
Share
Advertisement
 'கொரோனா' வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை; மாநில எல்லை மூடல்!

உடுமலை:'கொரோனா' முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் நுழையும் சின்னாறு சோதனை சாவடி மற்றும் ஒன்பதாறு சோதனைச்சாவடிகள் மூடப்பட்டன.'கொரோனா' முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கேரளா மாநிலத்தில் இந்நோய் தொற்று அதிகளவு உள்ளதால், அங்கிருந்து தமிழகத்திற்குள் பரவாமல் இருக்கும் வகையிலும், நேற்று முதல், மாநில எல்லைகளை மூட அரசு உத்தரவிட்டிருந்தது.அதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை- மூணாறு ரோட்டில், கேரளா மாநில எல்லையான சின்னாறு சோதனைச்சாவடி மூடப்பட்டது. வருவாய்த்துறை, போலீஸ், வனத்துறை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளைக்கொண்ட குழு, 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.கேரளா மாநிலத்திலிருந்து நுழையும், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்படுகிறது. இதே பகுதியில், கேரளா மாநில வனத்துறை மற்றும் வணிக வரித்துறை சோதனைச்சாவடிகள் உள்ளன. கேரளா அரசு எந்த உத்தரவும் வழங்காத நிலையில், தமிழகத்திற்குள் நுழைய அனுமதியில்லை, என அவர்களும் திருப்பி அனுப்பி வருகின்றனர்.அதே போல், தமிழகத்திலிருந்து கேரளா மாநிலம் செல்வதற்கு, ஒன்பதாறு வனத்துறை சோதனை சாவடி உள்ளது. இங்கும், தமிழகத்திலிருந்து கேரளா செல்லும்அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்படுகிறது. கேரளாவிற்கு செல்ல, வரும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மட்டும் நேற்று அனுமதிக்கப்பட்டனர். அவர்களும் முழுமையான மருத்துவ பரிசோதனை செய்த பிறகே, அனுமதிக்கப்படுகின்றனர்.அத்தியாவசிய பொருட்களாக, மருந்து, மளிகை, பால், காய்கறி கொண்டு செல்லும் வாகனங்கள், உரிய பரிசோதனைக்கு பின்னர், அனுமதிக்கப்படுகிறது. டிரைவர் மற்றும் ஊழியர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, அனுமதிக்கப்படுகின்றனர்.
மறையூர், மூணாறு பகுதியிலுள்ள மாணவ, மாணவியர் தமிழகத்திலுள்ள பள்ளி, கல்லுாரிகளில் படித்து வருகின்றனர், அதே போல், அப்பகுதியை சேர்ந்தவர்கள், பல்வேறு இடங்களில் பணியாற்றி வருகின்றனர்.அவர்கள் திரும்ப ஊருக்கு செல்லும் நிலையில், பஸ் போக்குவரத்தும், வழக்கமாக இயங்கும் ஜீப்களும் நிறுத்தப்பட்டன.உடுமலை பஸ் ஸ்டாண்ட் மற்றும் ஒன்பதாறு சோதனை சாவடிக்கு வரும், மாணவர்கள், பொதுமக்கள், வாகனங்கள் மூலம், கேரளா மாநிலம் சின்னாறு சோதனை சாவடியில் ஒப்படைக்கப்படுகின்றனர்.மாநில எல்லையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை, உடுமலை கோட்டாட்சியர் ரவிக்குமார், தாசில்தார் ஜெயசிங் சிவக்குமார், வனச்சரகர்கள் தனபாலன், முருகேசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.அதிகாரிகள் கூறியதாவது: அரசு உத்தரவுப்படி, கேரளா மாநிலத்திலிருந்து வரும் வாகனங்கள், பொதுமக்கள், மாநில எல்லையான சின்னாறு சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
தமிழகத்திலிருந்து கேரளா செல்வதும், ஒன்பதாறு சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்படுகிறது. அரசின் மறு உத்தரவு வரும் வரும், மாநில எல்லை மூடப்படும். முதல் நாளான நேற்று, மாணவர்கள், பொதுமக்கள் ஒரு சிலர் வந்திருந்தனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை, உரிய அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர். வரும் நாட்களில் உத்தரவு கடுமையாக பின்பற்றப்படும். நோய் தொற்று பரவாமல் இருக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, இரு மாநில மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X