பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு: மாணவர்களுக்கு கவிதை, ஓவியப்போட்டி

Added : மார் 22, 2020
Share
Advertisement

உடுமலை;உடுமலை, கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில், மாணவர்களுக்கு, 'கொரோனா தடுப்பு விழிப்புணர்வு' போட்டி நடக்கிறது.சர்வதேச அளவில் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு, இன்று முழுமையான ஊரடங்கு பின்பற்ற அரசு அறிவித்துள்ளது. இதன்படி அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், பொதுமக்கள், வீட்டிலேயே இருக்க அரசுத்துறைகள் அறிவுறுத்தி வருகின்றன.பொதுமக்கள் வீட்டில் இருப்பதால், வைரஸ் பரவுதல் தவிர்க்கப்படுவது மற்றும் சுகாதாரம், துாய்மை பின்பற்றுதலுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்த, கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணி திட்டம் சார்பில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.மாணவர்களுக்கு தன்சுத்தம் மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கவிதைப்போட்டிகளும் இன்று நடக்கிறது.மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்கள் வீட்டிலிருந்தபடி ஓவியங்களை வரைந்தும், கவிதைகளை எழுதி, அதனை புகைப்படம் எடுத்து, 8778201926 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.மாணவர்கள் சொந்தமாக வரைந்து அனுப்ப வேண்டும். ஓவியம் வரையும் தாளில், மாணவர்களின் பெயர் வகுப்பு, பள்ளி முகவரியுடன் அனுப்ப வேண்டும். சிறந்த ஓவியங்கள் மற்றும் கவிதைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓவியப்போட்டிக்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 'தன் சுத்தம்', ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு, 'சுற்றுப்புற சூழலும் சுகாதாரமும்', கவிதைப்போட்டிக்கு, கல்லுாரி மாணவர்களுக்கு 'துரத்துவோம் கொரோனாவை', பொதுமக்கள் மற்றும் விழிப்புணர்வில் பங்கேற்கும் பெரியவர்களுக்கு 'உங்களின் சுத்தமே உலகத்தின் சுகாதாரம்' என்ற தலைப்புகளில் போட்டி நடக்கிறது.இத்தகவலை, கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X