பொது செய்தி

தமிழ்நாடு

உடுமலையில் கடைகளை மூட அதிகாரிகள் அறிவுறுத்தல்: மளிகை, காய்கறி கடைகள் செயல்படுகின்றன

Added : மார் 22, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை நகரில், மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளை தவிர, மற்ற கடைகள் மூடப்பட்டன. மூடப்படாத கடைகள் 'சீல்' வைக்கப்படும், என அதிகாரிகள் எச்சரித்தனர்.'கொரோனா' வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக, திருப்பூர் மாவட்டத்தில், மருத்துவமனை, மருந்துக்கடைகள், மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள், பேக்கரி , ஓட்டல்களை தவிர்த்து, பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், மொபைல் போன் கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிலையங்கள் என அனைத்து வகையான கடைகளையும், வரும், 31 வரை தற்காலிக விடுமுறை அளித்து, மூட வேண்டும்.அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தியிருந்தார்.இது குறித்து, நகராட்சி சார்பில், வியாபாரிகள் சங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. இதனையடுத்து, நேற்று நகை கடைகள், துணிக்கடைகள் பெரும்பாலும் மூடப்பட்டிருந்தன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் நகை கடை வீதி, சீனிவாசா வீதி உள்ளிட்ட ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டன.உத்தரவை மீறி, பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு உள்ளிட்ட பகுதிகளில், மொபைல் போன் கடைகள், துணிக்கடைகள், ஸ்டேசனரி, பேன்சி என அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்பனை கடைகள் திறந்திருந்ததோடு, வியாபாரமும் நடந்து வந்தது.நகராட்சி சார்பில், ஆட்டோ ஒலிபெருக்கி மூலம், விளம்பரம் செய்யப்பட்டதோடு, சுகாதாரத்துறை அதிகாரிகள் குழு நேரடியாகச்சென்று அறிவுறுத்தியது.உடனடியாக கடைகள் பூட்டப்படாவிட்டால், நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளால் கடைகள் பூட்டி 'சீல்' வைக்கப்படும் என எச்சரித்தனர். இதனையடுத்து, அனைத்துக்கடைகளும் மூடப்பட்டன. நகரில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டதால், மக்கள் நடமாட்டம் இல்லாமல், கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.மளிகை, காய்கறிக்கடைகள் மட்டும் திறந்திருந்தன. பொதுமக்கள் வழக்கம் போல் பொருட்கள் வாங்கிச்சென்றனர்.அதிகாரிகள் கூறுகையில், 'கொரோனா' வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடுவதை தடுக்கும் வகையில், நகை, துணி உள்ளிட்ட அத்தியாவசிய தேவையில்லாத பொருட்கள் விற்பனை நிலையங்கள் மூடப்படுகின்றன. அத்தியாவசிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X