பொது செய்தி

தமிழ்நாடு

தென்னை தடுக்குகளின் விற்பனை தீவிரம்: ஒரு செட் ரூ.100 நிர்ணயம்

Added : மார் 22, 2020
Share
Advertisement
 தென்னை தடுக்குகளின் விற்பனை தீவிரம்: ஒரு செட் ரூ.100 நிர்ணயம்

உடுமலை;கோடைகாலத்தையொட்டி உடுமலை சுற்றுப் பகுதியில் தென்னை தடுக்கு களின் விற்பனை தீவிரமாகியுள்ளது.உடுமலை, ஜல்லிபட்டி, தினைக்குளம் பகுதியில், ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தடுக்கு பின்னும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அருகிலுள்ள தோப்புகளிலிருந்து, நுாறு தடுக்குகள், 200 முதல் 300 ரூபாய்க்கும் எடுத்து வருகின்றனர். அவற்றை எடுத்துவர, 400 முதல் 500 முதல் ரூபாய் செலவிடுகின்றனர்.ஒரு 'செட்',டில் 25 தடுக்குகள், நுாறு ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்கின்றனர். அங்குள்ள பல குடும்பங்களுக்கு இத்தொழில் மட்டுமே வாழ்வாதாரமாக இருக்கிறது. ஒரு நாளுக்கு குறைந்தபட்சம், 75 தடுக்குகள் பின்னு கின்றனர். வழக்கமான வாடிக்கையாளர்களை தவிர, மற்ற நாட்களில், பெரிதளவில், தடுக்குகள் விற்பனை இல்லை.கோடை காலம் மட்டுமே, அதிகளவிலான தடுக்குகள் விற்பனை செய்யப் படுகிறது. மேலும், குளத்தில் தண்ணீர் இருப்பதால் தண்ணீர் பற்றாக்குறை பிரச்னையும் இல்லை. இதனால், தற்போது, விற்பனையில் விலையையும் அதிகரித்துள்ளனர்.ஒரு தடுக்கு, ஐந்து முதல் ஆறு ரூபாய் வரை கணக்கிட்டு, விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகரிப்பு இருப்பினும், கோடையின் சுட்டெரிக்கும் வெப்பதால், தடுக்குகளின் விற்பனையும் தீவிரமாக நடக்கிறது.பல குடும்பங்களின் வாழ்வாதாரமாக இத்தொழில் உள்ளது. குறிப்பிட்ட காலத்தை தவிர, தடுக்குகளுக்கு நிலையான வருமானம் இல்லை. தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இத்தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X