பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் கூடும் பகுதிகளில் மருத்துவ பரிசோதனை: சுகாதாரத்துறை தீவிரம்

Added : மார் 22, 2020
Share
Advertisement
 மக்கள் கூடும் பகுதிகளில் மருத்துவ பரிசோதனை: சுகாதாரத்துறை தீவிரம்

உடுமலை:உடுமலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், மருத்துவ பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.'கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை, விளையாட்டு மைதானங்கள், பூங்கா, திருமூர்த்திமலை, அமராவதி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடல் என பொதுமக்கள் கூட்டமாக சேருவதை தடுக்கும் வகையில் நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மாநில எல்லையில், ஒன்பதாறு சோதனை சாவடி பகுதியில், சுகா தாரத்துறை சார்பில், மருத்துவக்குழு முகாமிட்டுள்ளது. இவ்வழியே வரும், பொதுமக்கள் முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே, அனுமதிக்கப்படுகின்றனர்.அரசு அலுவலகங்கள், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் என மக்கள் கூடும் பகுதிகளில், கிருமி நாசினி தெளிக்கப்படுவதோடு, கைகழுவிய பின்னரே, அனுமதிக்கப்படுகின்றனர்.ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில், சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு பணிகளும், பொதுமக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம், உடல் வெப்பம் அறியும் கருவிமூலம் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.ஊராட்சிகளில், முக்கிய இடங்களில், கிருமி நாசினி தெளித்தல் மற்றும் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X