பொது செய்தி

தமிழ்நாடு

வெறிச்சோடி காணப்பட்ட சந்தை வளாகம்: இன்றும், நாளையும் செயல்படாது

Added : மார் 22, 2020
Share
Advertisement

உடுமலை;உடுமலை, நகராட்சி சந்தைக்கு விவசாயிகள் காய்கறிகள் கொண்டு வராத தால், சந்தை வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. இன்றும், நாளையும் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.உடுமலை நகராட்சி சந்தைக்கு, சுற்றுப்பகுதி கிராமங்களில் விளையும், தக்காளி, தேங்காய், வெங்காயம், முருங்கை, கத்தரி, வெண்டை என தினமும், 700 டன் வரை காய்கறிகள் வரத்து வருகிறது. இங்குள்ள, 34 காய்கறி கமிஷன் கடைகளில், விவசாயிகள் கொண்டு வரும், காய்கள் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது. சந்தை வளாகத்திலுள்ள, 314 கடைகள் மற்றும் உள்ளூர், வெளிமாவட்ட வியாபாரிகள் கொள் முதல் செய்து வருகின்றனர்.பிரதமர் மோடி, 'மக்கள் ஊரடங்கு' திட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று ஒரு நாள், பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலிருந்து வெளியில் வராமல், இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.அதனால், நகரம் மற்றும் கிராமப்பகுதிகளிலுள்ள அனைத்துக்கடைகளும் இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. காய்கறி கொள்முதல் செய்ய வியாபாரிகள் வருகை இருக்காது என்பதால், சந்தையிலுள்ள கமிஷன் கடைகளுக்கு, நேற்று விடுமுறை அளிக்கப்பட்டு, அனைத்து கடைகளும் மூடப்பட்டன. விவசாயிகளும் காய்கறிகள் கொண்டு வரவில்லை. இதனால், காலை, 10:00 மணி முதல் பரபரப்பாக காணப்படும், சந்தை வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.இன்று, மக்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக, சந்தை வளாகத்திலுள்ள அனைத்து கமிஷன் கடைகள், காய்கறி உள்ளிட்ட அனைத்து நிரந்தர கடை களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.உடுமலை வாரச்சந்தை வழக்கமாக, திங்கட்கிழமை கூடுகிறது. அனைத்து வாரச்சந்தை களையும் மூட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால், நாளையும் சந்தை வளாகம் மூடப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X