பொது செய்தி

தமிழ்நாடு

கல்வியாண்டின் துவக்கத்தில் உதவித்தொகை வழங்க வலியுறுத்தல்

Added : மார் 22, 2020
Share
Advertisement

உடுமலை;அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மூன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, ஆண்டுக்கு, 500 ரூபாய், ஆறாம் வகுப்புக்கு, ஆயிரம் ரூபாய், ஏழு மற்றும் எட்டாம் வகுப்புக்கு, 1,500 ரூபாயும் வழங்கப்படுகிறது.பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள பெற்றோருக்கு இத்தொகை பயனுள்ளதாகும். மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.இத்தொகை, கல்வியாண்டு முடியும் வரை, மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. கல்வியாண்டு நிறைவடைந்து விடுமுறை அறிவித்த பின்பே, வழங்கப் படுகிறது. கல்வியாண்டின் துவக்கத்தில், விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.ஆனால், நிதியாண்டு கணக்கில், மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் மாதங்களில் மட்டுமே உதவித்தொகை வழங்கப்படுகிறது. எட்டாம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு, மீண்டும், மாற்றுச்சான்றிதழ் பெற பள்ளிக்கு செல்லும் போது தான் இத்தொகையை பெற வேண்டியுள்ளது.கல்வியாண்டின் இறுதியில் வழங்கப்படுவதால், பள்ளி நிர்வாகத்தினரும், நடைமுறை சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். மாணவர்களின் கல்வி தடைபடக்கூடாது என்ற நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட இத்திட்டம், மாணவர்களை, ஆண்டு தோறும் தாமதமாகவே சென்றடைகிறது.மாணவர்களுக்கு பயனுள்ள வகையில், உதவித் தொகையை, கல்வியாண்டின் துவக்கத்தில் வழங்க வேண்டுமென பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X