பொது செய்தி

தமிழ்நாடு

நுாலகங்களுக்கு விடுமுறை

Added : மார் 22, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை, சுற்றுப்பகுதியில் நேற்று முதல் நுாலகங்கள் மூடப்பட்டுள்ளன.'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில், பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், நகை மற்றும் துணிக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளி குழந்தைகளுக்கும், இதன் அடிப்படையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையாக இருப்பதால், குழந்தைகள் நுாலகத்திற்கு அதிகளவில் சென்றனர். நுாலகத்தில் வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, கைகளை கழுவுதல், உள்ளிட்ட செயல்கள் பின்பற்றப்பட்டன. இருப்பினும், பாதுகாப்பு கருதி, நேற்று முதல், நுாலகங்கள் தேதி குறிப்பிடப்படாமல், தற்காலிகமாக மூடுவதற்கு பொதுநுாலகத்துறை உத்தரவிட்டுள்ளது.இதன்படி, உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள அனைத்து நுாலகங்களும் மூடப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X