பொது செய்தி

தமிழ்நாடு

வேலைவாய்ப்பு இணையதளத்தில் போலிகள்: கவனமாக செயல்பட அறிவுறுத்தல்

Added : மார் 22, 2020
Share
Advertisement

உடுமலை;மத்திய அரசின், வேலைவாய்ப்புகளுக்களுக்கான இணையதளத்தின் போலிகளை கண்டறிவதில், பொதுமக்கள் கவனமாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.மத்திய அரசின் சார்பில், தபால் துறையில் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தபால் துறையின் மூலமாக வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு இணையதளம் மூலம் சிறப்பு வசதியும் ஏற்படுத்தப்பட்டது.வேலை தேடுவோர் மற்றும் வேலைவாய்ப்பு களை வழங்க காத்திருப்போரை, இணைக்கும் வகையில், பதிவு செய்து கொள்ள, www.ncs.gov.inஎன்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.மத்திய அரசின் அங்கீ காரம் பெற்ற இந்த இணையதளம் இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.இதுவரை, இதில், ஒரு கோடியே ஒரு லட்சத்து, ஐந்தாயிரத்து 398 பேர், வேலை தேடுபவர்களாகவும், 12 ஆயிரத்து 612 பேர் வேலைவாய்ப்பு வழங்கு பவர்களாகவும், பதிவு செய்துள்ளனர்.இணையதளத்தில், மொத்தமாக, ஒரு லட்சத்து, 43 ஆயிரத்து, 655 வேலைவாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன, பெண்களுக்கான வாய்ப்புகள், மாற்றுத் திறனாளிகளுக்கான வாய்ப்பு கள் உள்ளிட்ட அனைத்தும், தனித்தனிபிரிவுகளாக உள்ளன.அரசுத்துறை வேலைவாய்ப்புகளுக்கான பதிவு முறைகளும் இதில் இருக்கிறது. தேசிய அளவில் நடக்கும், வேலைவாய்ப்பு முகாம்கள் குறித்தும் அறிவிப்புகள் வெளியாகிறது.இந்த இணையதளத்தில், வேலைவாய்ப்பு அளிப்பதற்கு, அல்லது தேடுவதற்கும் அல்லது பணியாளர்கள் தேவைப்படும் நிர்வாகம் என அனைவரும், அவர்களுக்கான விபரங்களை இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதிலுள்ள வழிகாட்டுதல்படி, இணையத்தில் பயன்பெற்றுக்கொள்ளலாம். வேலைவாய்ப்பு தேடும் பலரும், தனியார் இணையதளங்களில் தங்கள் விபரங்களை பதிவு செய்கின்றனர். அவர்கள், வேலைவாய்ப்பு தருவதாக பணமோசடி செய்கின்றனர்.இதுகுறித்து புகார் தெரிவித்தாலும், நடவடிக்கை எடுப்பதில் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. வேறுவழியில்லாமல், புகார் அளிப்பதிலும் முக்கியத்துவம் பெறுவதில்லை.இந்த இணையதளம் அரசின் அங்கீகாரம் பெற்றுள்ளதால், மோசடிகளுக்கான வாய்ப்பில்லை. இருப்பினும், இளைஞர்களுக்கு, இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.தற்போது இந்த இணையதளத்தில், மாநிலம் வாரியாகவே வேலைவாய்ப்புகள், வேலைவாய்ப்பு வழங்குவோர், வேலை தேடுபவர்கள் விபரங்கள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.மேலும், இதுபோன்ற போலியான இணையதளங்களில் விபரங்களை பதிவிடாமல், கவனமாக இருக்க வேண்டுமெனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X