சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மடத்துக்குளத்தில் வக்கீலை வெட்டிய இருவர் கைது

Added : மார் 22, 2020
Share
Advertisement

மடத்துக்குளம்:மடத்துக்குளத்தில், வக்கீலை வெட்டிவிட்டு தப்பிச்சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம் வயலுாரை சேர்ந்தவர், செல்வகுமார், 37. வக்கீலான அவர், கடந்த, 19 ம் தேதி , இரவு மடத்துக்குளத்திலுள்ள தனது அலுவலகத்திலிருந்து, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அமராவதி ஆற்றுப் பாலத்தை கடக்கும் போது, பைக்கில் வந்த இருவர் அவரை சரமாரியாக ஆயுதத்தால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, வக்கீல்கள் மறியல், கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மடத்துக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திண்டுக்கல் மாவட்டம், கொழுமம் கொண்டான் பகுதியில் பதுங்கியிருந்த, பழநி, சித்திரைக்குளம் தண்டபாணி 41, சாமிநாதபுரம் மணிகண்டன் 30,ஆகிய இருவரை கைது செய்து மடத்துக் குளம், மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, வக்கீலை தாக்கியதாக போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X