பொது செய்தி

தமிழ்நாடு

'காட்டேஜ்களை திறந்தால் கடும் நடவடிக்கை' : பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் எச்சரிக்கை

Added : மார் 22, 2020
Share
Advertisement
 'காட்டேஜ்களை திறந்தால் கடும் நடவடிக்கை' : பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் எச்சரிக்கை

கோத்தகிரி;'நீலகிரியில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காட்டேஜ்கள் விதிமீறி திறக்கப்படுவது உறுதி செய்யப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கோத்தகிரியில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கிருமிநாசினி தெளித்து, அரசு பஸ் உட்பட வாகனங்கள் மற்றும் பொது இடங்கள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், இப்பணிகளை ஆய்வு செய்து, நோயின் தாக்கம், கை கழுவும் முறை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மனோரஞ்சிதம் நிருபர்களின் கூறுகையில், ''நீலகிரியில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே நடந்து வரும் சுகாதார பணிகளை காட்டிலும், கொரோனா எதிரொலியாக, கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.''கோத்தகிரி பேரூராட்சி உட்பட்ட பஸ் ஸ்டாண்ட் உட்பட, பொது இடங்களை ஒரு நாளைக்கு ஐந்து முறை கழுவ வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வரும், 31ம் தேதிவரை காட்டேஜ்கள் மூடப்பட்டுள்ளன. மீறி திறக்கப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட காட்டேஜ் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.தொடர்ந்து, மார்க்கெட், தவிட்டுமேடு உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார பணிகளை ஆய்வு செய்தார். இதில், கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் உட்பட, பேரூராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X