பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டியில் தங்கும் விடுதிக்கு 'சீல்' உத்தரவை மீறியதால் நடவடிக்கை

Added : மார் 22, 2020
Share
Advertisement

ஊட்டி:மாவட்ட நிர்வாகம், சுகாதார துறை சார்பில், நீலகிரியில் 'கொரோனா வைரஸ்' தடுப்பு நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.இதையடுத்து, கடந்த, 17ம் தேதி முதல் தங்கும் விடுதிகள்; சுற்றுலா தலங்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி, மூடப்பட்டது.உத்தரவை மீறி, ஊட்டி சர்ச்ஹில் பகுதியில் உள்ள ஒரு காட்டேஜில் சுற்றுலா பயணிகளை தொடர்ந்து பதிவு செய்து தங்க வைத்துள்ளனர். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது.நகராட்சி கமிஷனர் சரஸ்வதி உத்தரவின்பேரில், நகராட்சி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட தங்கும் விடுதியில் ஆய்வு செய்ததில் அங்கு சுற்றுலா பயணிகள் தங்கியிருந்தது தெரியவந்தது. அங்கு தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, தங்கும் விடுதிக்கு 'சீல்' வைக்கப்பட்டது.கமிஷனர் சரஸ்வதி கூறுகையில்,''கொரோனா அச்சுறுத்தலை அடுத்து இங்கு உள்ள தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்க தடை விதிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி, ஊட்டி 'சர்ச் ஹில்' பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் சுற்றுலா பயணிகள் தங்கியிருந்தது தெரியவந்தது. அந்த விடுதிக்கு 'சீல்' வைக்கப்பட்டது. தொடர்ந்து, மற்ற இடங்களும் கண்காணிக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X