பொது செய்தி

தமிழ்நாடு

பயணிகள் கூட்டம் குறைவு: அரசு பஸ்கள் நிறுத்தம்

Added : மார் 22, 2020
Share
Advertisement

கோத்தகிரி:கோத்தகிரியில் இருந்து இயக்கப்படும், 10க்கும் மேற்பட்ட, அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.கோத்தகிரி பகுதியில், கொரோனா வைரஸ் எதிரொலியாக, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுபடி, அரசு பஸ் உட்பட, இதர வாகனங்களுக்கு கிருமி நாசினி மருந்து அடித்து, சுகாதார பணிகள் நடந்து வருகிறது. கடந்த இரு நாட்களாக, கிராமப்புறங்களில் இருந்து வரும் பஸ்களில், பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து காணப்படுகிறது.இந்நிலையில், கோத்தகிரியில் இருந்து, கோவை, பழநி, மதுரை மற்றும் பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும், உள்ளூர் கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் உட்பட, 10 க்கும் மேற்பட்ட பஸ்கள் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டுள்ளன.பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தேவைப்படும் பட்சத்தில், கோத்தகிரியில் இருந்து, மேட்டுப்பாளையத்துக்கு, ஒரு பஸ் இயக்கப்படுகிறது. அரசின் சுய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வெளியிடங்களில் இருந்து, கோத்தகிரிக்கு வந்த பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு சென்றதால், நகரில் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X