சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில் பணிமனையில் அனுமதி மறுப்பு: வெளி மாநிலம் சென்று வந்தவர்களுக்கு சிக்கல்

Added : மார் 22, 2020
Share
Advertisement

குன்னுார்:குன்னுார் மலை ரயில் பணிமனையில், கேரளா மற்றும் வடமாநிலங்களுக்கு சென்று திரும்பியவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.கொரோனா காரணமாக, வெளி மாநிலத்தவர்கள், சுற்றுலா பயணிகள், நீலகிரிக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.வெளிமாநிலத்திற்கு சென்றவர்கள் மீண்டும் திரும்பும் போது, கொரோனா வைரஸ் பரவாமல் இருக்கவும், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யாமல் அனுமதி அளிப்பதில்லை.இந்நிலையில், குன்னுார் ரயில் பணிமனையில் பணியாற்றும், 6 பேர், தங்களது சொந்த ஊரான கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கு சென்று நேற்று திரும்பினர். ரயில்வே மருத்துவமனையில் வாரம் இருமுறை மட்டுமே மேட்டுப்பாளையத்தில் இருந்து டாக்டர் வருவதால், மருத்துவ பரிசோதனை பெற முடியாத நிலை ஏற்பட்டது. 'அரசு மருத்துவமனைக்கு சென்ற போது, பாதிப்பு ஏதுமில்லை; எனினும், 14 நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்,' என, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ சான்றிதழ் ஏதும் வழங்கவில்லை.ஆனால், 'மருத்துவ சான்றிதழ் கொண்டு வந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும்,' என, தெரிவித்து நிர்வாகம், அவர்களை பணிக்கு அனுமதிக்கவில்லை.இதனால், ஊழியர்கள் தொடர்ந்து விடுப்பு எடுக்க முடியாமலும், பணிக்கு செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். இதற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X