சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்றுசுழலில் சிக்கிய கல்லுாரி மாணவர் பலி

Added : மார் 22, 2020
Share
Advertisement
 ஆற்றுசுழலில் சிக்கிய  கல்லுாரி மாணவர் பலி

பந்தலுார்:பந்தலுார் பொன்னானி ஆற்றில் குளிக்க சென்ற கல்லுாரி மாணவர் சுழலில் சிக்கி பலியானார்.பந்தலுார் அருகே, குந்தலாடியை சேர்ந்தவர் புண்ணியசீலன். இவரது மகன் கோபிதாத்,18. இவர் கூடலுார் அரசு கல்லுாரியில்,பி.எஸ்.சி., முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று மதியம், 2:00 மணிக்கு இவரும், இவரின் நண்பர்கள், மூன்று பேர், பொன்னானி ஆற்றில் குளித்துள்ளனர்.ஆற்றில் சுழல் இருப்பது தெரியாத நிலையில், கோபிநாத் சுழலில் சிக்கி தண்ணீருக்கு அடியில் சென்றுள்ளார்.இதனை பார்த்த நண்பர்கள் அலறினர். பொன்னானி பகுதியை சேர்ந்தவர்கள் சென்று சுழலில் சிக்கிய கல்லுாரி மாணவரை நீண்ட போராட்டத்துக்கு பின்னர் மீட்டுள்ளனர். அவரை, தனியார் ஜீப்பில் பந்தலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், 'அவர் ஏற்கனவே இறந்துவிட்டார்,'என, தெரிவித்தார். தகவலறிந்த உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் மருத்துவமனையில் திரண்டனர். கோபிநாத்தின் தாயார் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. நெலாக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X