பொது செய்தி

தமிழ்நாடு

ஆந்திர மாநில நெல் லாரிகள் வரத்து அதிகரிப்பு கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம்

Added : மார் 22, 2020
Share
Advertisement

செங்குன்றம்:ஆந்திராவில் இருந்து, நெல் வரத்து அதிகரித்துள்ளதால், அவற்றை கொண்டு வரும், கிருமி நாசினி தெளிக்கப்படாத லாரிகள், கட்டுப்பாடற்ற உணவு பழக்கங்களை கொண்ட லாரி ஊழியர்களால், கொரோனா பாதிப்பு ஏற்படும் என, பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
சென்னை செங்குன்றம் நெல், அரிசி, மொத்த விற்பனை மையமாக உள்ளது. அறுவடை காலங்களில், தினமும், 100 முதல், 150 லாரிகள் மூலம், 2,000 முதல், 3,000 டன் வரை, நெல் வரத்து நீடிப்பது வழக்கம்.சில தினங்களாக, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள, மாவட்ட பகுதிகளில் இருந்து, தினமும், 120 லாரிகளில் நெல் வரத்து நீடிக்கிறது.
அதில், 80 சதவீத லாரிகள், இரவில் பயணித்து, அதிகாலையில், செங்குன்றத்திற்கு வந்து சேர்கின்றன.அந்த லாரிகளில், கொரோனா கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுவதில்லை. அவற்றில் வரும் ஊழியர்களும், மது, கட்டுப்பாடற்ற உணவு முறைகளை கொண்டவர்களாக உள்ளனர்.இதனால், செங்குன்றம் சுற்றுவட்டார மக்களின் சுகாதார பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு, பால், மருந்து, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்கள் தவிர மற்றவற்றுக்கான போக்குவரத்துகள், 31ம் தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளன.இந்த நிலையில், ஆந்திராவிலிருந்து நெல் லாரிகள் தடையின்றி வந்து செல்கின்றன. செங்குன்றம் சுற்றுவட்டார அரிசி அலைகளில், தேவையான அளவு நெல் மற்றும் அரிசி கையிருப்பு உள்ளதாக, அரிசி வியாபாரிகள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், பொதுமக்களின் சுகாதார நலனை கருதி, 31ம் தேதி வரை, ஆந்திராவிலிருந்து, சென்னைக்கு வரும், நெல் லாரிகளின் வருகையை தடை செய்ய வேண்டுமென, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆந்திராவின் நெல்லுார், நாயுடுபேட்டை, வரதபாளையம், வாரங்கல் மாவட்ட பகுதிகளில் இருந்து, ஆர்.என்.ஆர்., பாபட்லா நெல் ரகங்கள் அதிக அளவில் வருகின்றன.
ஆர்.என்.ஆர்., 1 மூட்டை, 1,500 ரூபாய் -- 1,600 ரூபாய்க்கும், பாபட்லா, 1 மூட்டை, 1,400 முதல், 1,500 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X