பொது செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சியில் 'பைக் ஆம்புலன்ஸ்' சேவை!

Added : மார் 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 பொள்ளாச்சியில் 'பைக் ஆம்புலன்ஸ்' சேவை!

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், 'இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்' சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியவருக்கு உடனடியாக மருத்துவ சேவை கிடைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி பகுதியில், விபத்தில் சிக்கியவர்களை மீட்க, 108 ஆம்புலன்ஸ், பச்சிளங்குழந்தைகளை அழைத்துச் செல்ல தனி ஆம்புலன்ஸ் என மொத்தம், 12 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன.அதில், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்ல, 108 ஆம்புலன்ஸ் இயக்கப்படுகிறது. '108' என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு விபத்து நடந்த இடம் குறித்து தகவல் தெரிவித்தால், உடனடியாக அவர்களை மீட்க ஆம்புலன்ஸ் அனுப்பப்படுகிறது.பொள்ளாச்சியில் கடந்த ஒரு ஆண்டில், விபத்தில்சிக்கிய, 6,700 பேர் மீட்டு அவசர சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.இந்நிலையில், போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியில் ஆம்புலன்ஸ் உடனடியாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. நெரிசலை கடந்து செல்ல காலதாமதம் ஆவதால், விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக சிகிச்சை கிடைப்பதில்லை. மேலும், சிறு விபத்துக்கு கூட ஆம்புலன்ஸ் செல்ல வேண்டிய நிலை உள்ளது.நெரிசல் பகுதியில் உடனடியாக விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில், 'பர்ஸ்ட் ரெஸ்பான்டர் பைக் ஆம்புலன்ஸ்' எனப்படும், 'இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்' சேவையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி பகுதியில், இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் ஒன்று முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பைக் ஆம்புலன்சில், 108 ஆம்புலன்சில் உள்ள அனைத்து மருத்துவ உபகரணங்களும் உள்ளன. இந்த ஆம்புலன்சில், 54 வகையான பொருட்கள் உள்ளன. '108' எண்ணுக்கு தகவல் வந்ததும், உடனடியாக சம்பவ இடத்துக்கு இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் சென்று, தேவையான முதலுதவி சிகிச்சை அளிக்கிறது. அதன் பின் தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, ஆம்புலன்ஸ் வர வழைக்கப்படுகிறது.இதனால், உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைப்பதால் உதவியாக இருக்கும் என, 108 ஆம்புலன்ஸ் சேவை அதிகாரிகள் தெரிவித்தனர். '108 ஆம்புலன்ஸ்' கோவை மாவட்ட மேலாளர் செல்வமுத்து குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோகுல் ஆகியோர் கூறுகையில், ''தமிழ்நாடு சுகாதாரத்துறையின் கீழ், வி.வி.கே., இ.எம்.ஆர்.ஐ., (வி.வி.கே., இமர்ஜென்சி இன்ஸ்டிடியூட்) மூலமாக ஆம்புலன்ஸ் சேவை நடக்கிறது.நெரிசல் மிகுந்த இடங்களில், விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க, பைக் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அவசரம் இல்லாத சூழலில் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று, முதலுஉதவி சிகிச்சை அளிக்கப்படும். காயம் மட்டும் உள்ளதா; ஆம்புலன்ஸ் வர வேண்டுமா என்பது குறித்து தகவல் கொடுக்கப்படும்.பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் ஒரு பைக் ஆம்புலன்ஸ் இயக்கப்படுகிறது. தேவைப்பட்டால் கூடுதல் ஆம்புலன்ஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-மார்-202011:17:04 IST Report Abuse
Ram Pollachi கிளிக் செய்வதற்கு முன்பு தலைக்கவசம் அணிய சொல்லியிருக்கலாம்? அனைவருக்கும் உதவியாய் இருந்தால் சரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X