பொது செய்தி

தமிழ்நாடு

தரமான விதை உற்பத்தி செய்ய வழிமுறைகள்: விதைச்சான்று உதவி இயக்குனர் அறிவுறுத்தல்

Added : மார் 22, 2020
Share
Advertisement

மடத்துக்குளம்:திருப்பூர் மாவட்டத்தில், தரமான விதை உற்பத்திக்குபின்பற்ற வேண்டிய நடைமுறைகள் , குறித்து விதைச்சான்று துறை உதவி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது: விதைப்பண்ணை பதிவுசெய்யப்பட்ட வயல்களில் வயல் ஆய்வின் மூலம் கலப்புகள், களைகள், கலவை, நீக்கம் செய்யப்பட்டு வயலின் தரம் உறுதி செய்யப்படும். வயல் தரத்தில் தேறிய விதைப்பண்ணைகள் அறுவடை செய்யப்படும் போதும், அதன் பின்பும் கலவன் ஏற்படாமல் தரமான விதைகளை உற்பத்தி செய்வதில் விதை உற்பத்தியாளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.நெல் அறுவடையின் போது, ரகங்கள் பிரித்து தனித்தனியாக அறுவடைசெய்து, கதிர் அடித்து, உலர வைக்க வேண்டும். கதிரடிக்கும் போது அந்த இடத்தையும் முழுமையாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அறுவடை முடிந்த மூன்று தினங்களுக்குள் கண்டிப்பாக உலர வைக்க வேண்டும். இல்லையெனில் முளைப்புத் திறன் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. காலை, 11:00 மணி வரையிலும் மாலை, 3:00 மணிக்கு மேலும் உலரவைக்க வேண்டும்.விதை சுத்தி நிலையத்தையும் நேர்த்தியாகவும், சுத்தமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். கிடங்கு மற்றும் காலி இடங்களில் ஏற்படும் விரிசல்களை உடனடியாக பராமரிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது இடிபாடுகளில் தங்கும் விதைகள், அடுத்துவரும் விதைகளுடன் கலப்பதை தடுக்கலாம். பறவைகள், எலிகள் வராமலும், மழைநீர் விழாதபடி கட்டமைப்பு இருக்க வேண்டும். மூட்டைகளை சுவற்றிலும், தரையிலும் படாமல் அடுக்குவதால் ஈரப்பதம் உறிஞ்சுவதை தவிர்க்கலாம். மூட்டைகளை அடுக்கும் போது, ஒரு அட்டிகையில், 250 கிலோவிற்கு மிகாமலும், இடைவெளி விட்டும் காற்றோட்டம் கிடைக்கும் படியும் அடுக்க வேண்டும். விதை சுத்திகரிப்பு நிலையங்களில், பூச்சி தாக்குதலை கண்காணித்து தேவைக்கு ஏற்ப மருந்து தெளிக்க வேண்டும்.சுத்திகரிப்பு பணிக்கு முன்பு இயந்திரங்களை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். முதலில் வெளிவரும் அரை மூட்டை விதைகளை கழிவில் கலந்துவிட வேண்டும். இதை விதைக்கு பயன்படுத்தக்கூடாது. இதற்குப் பின்பு இயந்திரம் மூலம் சுத்தம் செய்து கிடைக்கும் விதைகளை மூட்டைகளாக்க வேண்டும். இந்த முறையை பின்பற்றினால் தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X