புகையால் பகை| Dinamalar

புகையால் பகை

Added : மார் 22, 2020
Share
உடுமலை, அரசு மருத்துவமனை ரோட்டில் குப்பைக்கழிவுகளை எரிப்பதனால், பரவும் புகையால், காற்று மாசு ஏற்படுகிறது.எஸ்.லட்சுமி, உடுமலை.தெருநாய்கள் தொல்லைஉடுமலை,போடிபட்டி குடியிருப்பு அருகில் தெருநாய்கள் அட்டகாசம் அதிகரிப்பதால், பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.எம்.சாமிநாதன், உடுமலை.பயணிகள் அவதிஉடுமலை, பெதப்பம்பட்டி நால்ரோட்டில் நிழற்கூரை இல்லாததால், பயணிகள் வெயிலில்

உடுமலை, அரசு மருத்துவமனை ரோட்டில் குப்பைக்கழிவுகளை எரிப்பதனால், பரவும் புகையால், காற்று மாசு ஏற்படுகிறது.எஸ்.லட்சுமி, உடுமலை.தெருநாய்கள் தொல்லைஉடுமலை,போடிபட்டி குடியிருப்பு அருகில் தெருநாய்கள் அட்டகாசம் அதிகரிப்பதால், பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.எம்.சாமிநாதன், உடுமலை.பயணிகள் அவதிஉடுமலை, பெதப்பம்பட்டி நால்ரோட்டில் நிழற்கூரை இல்லாததால், பயணிகள் வெயிலில் காத்திருக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.வி.கனகராஜ், உடுமலை.தேங்கும் குப்பைவால்பாறை நகரில் பல இடங்களில் திறந்தவெளியில் குப்பை குவிக்கப்பட்டுள்ளதால், சுகாதாரம் பாதிக்கிறது. குப்பை கழிவுகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.க.சிந்து, வால்பாறை.கடும் துர்நாற்றம்பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில், ரோட்டரி அலுவலகம் அருகே மண் ரோட்டில் சாக்கடை கால்வாய் அடைத்து நிற்பதால், கடும் துர்நாற்றம் வீசி சுகாதாரம் பாதிக்கிறது.ராமச்சந்திரன், பொள்ளாச்சி.போக்குவரத்து பாதிப்புபொள்ளாச்சி ராஜாமில் ரோட்டில், வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. ஆக்கிரமித்து நிறுத்தும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.எஸ்.காளிதாஸ், பொள்ளாச்சி.தொற்றுநோய் அபாயம்பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டினுள், சிறுநீர் கழிக்குமிடம் பல மாதங்களாக முறையான பராமரிப்பின்றி கடும் துர்நாற்றம் வீசுகிறது. தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.கே.சக்திவேல், பொள்ளாச்சி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X