கோலி சோடா விற்பனை சரிவு: 'கொரோனா' அச்சம் எதிரொலி

Added : மார் 22, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:கோலி சோடா உற்பத்தி அதிகரித்தும், கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, விற்பனை சரிந்தது.வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், தாகத்தை போக்க, ஆங்காங்கே சர்பத், சோடா கடைகள் அதிகரித்துள்ளன.கிராமங்கள் தோறும் செயல்பட்டு வந்த கோலி சோடா தயாரிப்புகள், மெல்ல மறைந்து வந்த நிலையில், ஒருசிலர் மட்டுமே இன்னமும் தொடர்கின்றனர். நெகமம், வடசித்துார் பகுதிகளில் கோலி சோடா

பொள்ளாச்சி:கோலி சோடா உற்பத்தி அதிகரித்தும், கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, விற்பனை சரிந்தது.வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், தாகத்தை போக்க, ஆங்காங்கே சர்பத், சோடா கடைகள் அதிகரித்துள்ளன.கிராமங்கள் தோறும் செயல்பட்டு வந்த கோலி சோடா தயாரிப்புகள், மெல்ல மறைந்து வந்த நிலையில், ஒருசிலர் மட்டுமே இன்னமும் தொடர்கின்றனர். நெகமம், வடசித்துார் பகுதிகளில் கோலி சோடா தயாரிப்பு மற்றும் விற்பனை மிகக்குறைந்த அளவே நடக்கிறது. நெகமம் பகுதி தயாரிப்பாளர்கள், டாஸ்மாக் கடைகளுக்கும், பெட்டி கடைகளுக்கும் சப்ளை செய்கின்றனர்.வடசித்துார் பகுதி கோலி சோடா தயாரிப்பாளர் நாச்சிமுத்து கூறியதாவது:கடந்த ஆண்டை போல சோடா, சோடா சர்பத் விற்பனை இல்லை. காஸ்சிலிண்டர், எலுமிச்சை மற்றும் சோடா தயாரிப்பு பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால், கடந்த ஆண்டு, 15 ரூபாய்க்கு விற்ற சோடா சர்பத் தற்போது, 20 ரூபாயாக விலை உயர்ந்தது.கோடையின் துவக்கத்தில், பரபரப்பாக விற்பனையான சோடா சர்பத், கடந்த சில வாரங்களாக விற்பனை சரிந்துள்ளது. கொரோனா அச்சமே இதற்கு காரணமாகும்.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X