பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' வைரஸ் எதிரொலி: கோவில்களில் தூய்மைப் பணி

Added : மார் 22, 2020
Share
Advertisement

வால்பாறை,:வால்பாறையில் 'கொரோனா' வைரஸ் பாதிப்பு எதிரொலியாக கோவில்களில், கிருமி நாசினி தெளிக்கும் பணி துவங்கியது.தமிழக -- கேரள எல்லையில் அமைந்துள்ள வால்பாறையில், 'கொரோனா' வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க, மத்திய, மாநில அரசு உத்தரவுப்படி, சுப்ரமணிய சுவாமி கோவில், கருமலை பாலாஜி கோவில், முடீஸ் சுப்ரமணிய சுவாமி கோவில்கள் அடைக்கப்பட்டன.வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், டாக்டர் பாபு லட்சுமணன் தலைமையில் மருத்துவக்குழுவினர் கொண்ட சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.வால்பாறை நகராட்சி சார்பில், 'கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க, கமிஷனர் பவுன்ராஜ் உத்தரவின் பேரில், அரசு பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில், சர்ச், பள்ளி வாசல் உள்ளிட்ட வழிபாட்டு ஸ்தலங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது.வால்பாறையிலிருந்து எஸ்டேட் பகுதிக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் டிரைவர், நடத்துனர்கள் முகக்கவசம் அணிந்து பணியாற்றினர்.இது தவிர, வால்பாறை எஸ்டேட் தொழிலாளர்களுக்கு, 'கொரோனா' வைரஸ் தடுப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது.தொழிலாளர்களின் வீட்டிற்கு வெளியூர்களில் இருந்து உறவினர்களை வரவழைக்கவோ, வெளியூர் செல்லவோ வேண்டாம் என்றும், மதியம் உணவு சாப்பிடும் முன், சோப்பு போட்டு கைகளை நன்றாக கழுவ வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X