பொது செய்தி

தமிழ்நாடு

பேரூராட்சியில் கிருமி நாசினி தயாரிப்பு: தூய்மை பணியாளர்களுக்கு 'சபாஷ்'

Added : மார் 22, 2020
Share
Advertisement

ஆனைமலை:வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சியினர், பொது இடங்களில் கிருமி நாசினி தெளித்தும், மக்களுக்கு வழங்கியும், 'கொரோனா' தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.ஆனைமலை அடுத்த வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சியில், 18 வார்டுகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பேரூராட்சியினர் கடந்த இரண்டு வாரங்களாக, கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.வேட்டைக்காரன்புதுார் பஸ் ஸ்டாப் நிழற்கூரை, அரசு மருத்துவமனை, அரசுப்பள்ளி வளாகம், கோவில்கள், ரேஷன்கடை, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பொது இடங்களில், கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.மேலும், மக்களுக்கு 'சானிடைசர்' பயன்படுத்தி கைகழுவும் முறை, கொரோனா பரவும் முறை, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், பேரூராட்சி பணியாளர்களே கிருமி நாசினி தயாரித்து, மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். மக்கள் கிருமி நாசினி பெற்றுக்கொள்ள அழைப்பு விடுத்து உள்ளனர். இதேபோல், ஆனைமலை, ஒடையகுளம் பேரூராட்சியினர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த, 'பிளீச்சிங் பவுடர்' சிறந்த கிருமி நாசினியாக பயன்படுத்தப்படுகிறது. 320 கிராம் 'பிளீச்சிங் பவுடர்', ஒரு லிட்டர் நீரில் கலக்கப்படுகிறது. இந்த கரைசலை, ஒன்பது லிட்டர் நீரில் கலந்து பயன்படுத்தலாம். இந்த முறையை பின்பற்றி வீட்டிலேயே கிருமி நாசினி தயாரிக்கலாம்.மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக, வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சியில் கிருமி நாசினி கரைசல் தயாரிக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. தேவைப்படும் மக்கள், பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்து பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X