பொது செய்தி

தமிழ்நாடு

ஈசியாய் எடுக்கலாம் பாஸ்போர்ட்!

Added : மார் 22, 2020
Share
Advertisement

'வெளிளிளிநாட்டு சுற்றுலா போய் விட்டு வருவோமா... பிளான் பண்ணலாமே' என்று நண்பர்கள் கேட்டாலே, பலரும், 'எனக்கு இன்னும் பாஸ்போர்ட்டே எடுக்கல, பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டது, 'பாஸ்போர்ட் தொலைந்து விட்டது; மீண்டும் எடுப்பதெல்லாம் தலைவலி பிடித்த வேலை' என்று ஆரம்பத்திலேயே அதற்கு, 'ஸ்பீட் பிரேக்கர்' போடும் பதில்களை தயாராக வைத்திருப்போம்.
விமானம் ஏறிப் பறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும், 'உள்ளூருக்குள்ளேயே போய் விட்டு வந்து விடுவோம், வெளிநாடெல்லாம் இப்போதைக்கு சரிப்படாது' என்று முடிவெடுத்து விடுகின்றனர்.உண்மையில், மிக மிக எளிதாக, 'ஆன்லைனி'லேயே பாஸ்போர்ட்டை விண்ணப்பித்து, சில நாட்களிலேயே பெற்றுக் கொள்ள முடியும். அதை, 10 ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக் கொண்டு, நாம் நினைத்த நாடுகளுக்கு, ஜாலியாகப் போய் வரலாம். ஒன்பது ஆண்டுகள் முடிந்தவுடன், எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
பாஸ்போர்ட் எடுக்க தேவையான ஆவணங்கள்:ஆதார் அட்டை அசல் (பெயர், பிறந்த தேதி, முகவரி, தந்தை பெயர் மற்றும் தாய் பெயர் சரியாக இருக்க வேண்டும்) இதில் தகவல்கள் சரியாக இல்லையென்றால் ( பிறந்த தேதிக்காக - 10, 12ஆம் வகுப்பு, கல்லுாரி மதிப்பெண் சான்றிதழ், பான் கார்டு உள்ளிட்டவை பயன்படுத்தலாம்)முகவரி மாற்றமாக இருந்தால், வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், எரிவாயு இணைப்பிற்கான ரசீது போன்றவற்றை கொடுக்கலாம்.பத்தாவது மேல் படித்திருந்தால். அதற்கான கல்வி சான்றிதழை கொண்டு போகவும். (ECR முத்திரை வராது)பாஸ்போர்ட் புதிதாக எடுக்க, புதுப்பிக்கவோ கட்டணம், 1500 ரூபாய்.விண்ணப்பிக்கும் வழிமுறை படிகள்
முதலில் https://portal2.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink# என்ற இணைய தளத்திற்கு செல்லவும். அதில் புதிய பயனர்களுக்கான (New User Registration) பதிவில், பாஸ்போர்ட் அலுவலகம், பெயர், பிறந்த தேதி, 'இ - மெயில்' லாக் இன் ஐடி, பாஸ்வேர்டு உள்ளிட்டவற்றை கொடுத்து, அக்கவுன்ட்டை, 'ஆக்டிவேட்' செய்யுங்கள்.
புதிய அக்கவுன்டை திறந்தவுடன், அதில் புதிய பாஸ்போர்ட் (apply for fresh passport) என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள். அதில், ALTERNATIVE 1 இல், Click here to fill the application form online என்ற தேர்வை செய்யவும்.
பின், சாதாரண முறையில் வேண்டுமா அல்லது தட்கல் முறையில் பாஸ்போர்ட் வேண்டுமா?, பாஸ்ப்போர்ட்டில், 36 பக்கங்களா அல்லது 60 பக்கங்கள் வேண்டுமா என்று தேர்ந்தெடுங்கள். அடுத்த கட்டத்திற்கு செல்லவும்.
இதில், உங்கள் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, பாலினம், பிறந்த ஊர், இந்திய குடிமகனா, வேலை செய்பவரா, பான் எண் (இருந்தால் கொடுக்கலாம்), வாக்காளர் அடையாள எண் (இருந்தால் கொடுக்கலாம்), படிப்பு, ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை சரியாக கொடுங்கள்.அடுத்த ஸ்டெப்பில், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தகவல்களையும், அதற்கு அடுத்த ஸ்டெப்பில் தற்போதுள்ள முகவரி, மொபைல் எண், காவல்நிலைய பிரிவு உள்ளிட்ட விபரங்களையும், அடுத்து ஏதேனும் அவசரத்துக்குத் தொடர்பு கொள்ள, ஒருவரின் பெயர் மற்றும் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவும்.
அடுத்து இரு நண்பர்களின் விபரங்களை கொடுங்கள். அதன்பின்னர், இது முதல் பாஸ்போர்ட்டா அல்லது இதற்கு முன்பு பாஸ்போர்ட் வைத்திருந்தீர்களா, உங்கள் மீது எதுவும் குற்றவியல் வழக்குகள் உள்ளதா என்று சில கேள்விகளுக்கு, சரியான பதிலை தேர்வு செய்யவும்.இறுதியாக, நீங்கள் கொடுத்த அனைத்து விபரங்களையும், ஒரு முறை சரிபார்க்க உங்களைக் கேட்கும். உள்ளிட்ட அனைத்து தகவல்களும் சரி என்றால், அடுத்த ஸ்டெப்புக்கு செல்லவும்.அடுத்தது, பாஸ்போர்டுக்கு உண்டான பணத்தை, 'ஆன்லைன்' மூலம் செலுத்த வேண்டும். பின், உங்களுக்கு வசதியான தேதி மற்றும் ஊரைத் தேர்வு செய்யுங்கள். நீங்கள் பாஸ்போர்ட் அலுவலகத்திற்குச் செல்லும் போது, 'ஆன்லைன்' மூலம் நிரப்பப்பட்ட தகவல்கள் அடங்கிய படிவத்தை எடுத்துச் செல்லவும்; கூடவே, ஆவணங்களையும் எடுத்துச் செல்லவும். அவ்வளவுதான், சரிபார்ப்புக்குப் பின், உங்கள் வீடு தேடி, பாஸ்போர்ட் வந்து விடும்.
உங்களால் இதை செய்யமுடியாது என்று நினைத்தால், டிராவல் ஏஜென்ட்டை அணுகலாம். 300 ரூபாய் அளவுக்கே சேவைக் கட்டணமாக பெறப்படுகிறது. பாஸ்போர்ட் தொலைந்து விட்டது, முகவரி மாற்றம், ஆதார் தகவல்களில் பிழை போன்ற விஷயங்களில், டிராவல் ஏஜென்டுகள் உதவிகரமாக இருப்பர்.- ஆரூர் சலிம்saleem1090@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X