பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' பாதிப்பு எதிரொலி எல்லையில் செக்போஸ்ட் 'குளோஸ்'

Added : மார் 22, 2020
Share
Advertisement

வால்பாறை,:கொரோனா பாதிப்பால், வால்பாறை அருகே, தமிழக, கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடி மூடப்பட்டது.தமிழக, கேரள எல்லையில் அமைந்துள்ளது வால்பாறை. சோலையாறு அணை அருகே, கேரள மாநிலம் மளுக்கப்பாறை அமைந்துள்ளது.வால்பாறையில் இருந்து தினமும் காலை, மாலையில், தனியார் பஸ்கள் கேரள மாநிலம் சாலக்குடிக்கு, மளுக்கப்பாறை, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி வழியாக இயக்கப்படுகிறது.இதே போல் சாலக்குடியிலிருந்து அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி வழியாக மளுக்கப்பாறைக்கு நாள் தோறும் நான்கு முறை கேரள அரசு பஸ்சும் இயக்கப்படுகிறது.இந்நிலையில், கொரோனா வைரஸ் காய்ச்சல் கேரளாவில் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக, கேரள எல்லையில் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக்குழுவினர், நகராட்சி துாய்மைப் பணியாளர்கள் முகாமிட்டு, செக்போஸ்ட் வழியாக வால்பாறைக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளித்து, மருத்துவ பரிசோதனையும் மேற்க்கொண்டனர்.இந்நிலையில், கேரளாவில் நோய் பாதிப்பு அதிகமாக காணப்படுவதால், வால்பாறையிலிருந்து கேரளாவுக்கும், கேரளாவிலிருந்து வால்பாறைக்கும் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தமிழக, கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடி மூடப்பட்டதோடு, கேரளாவிலிருந்து வால்பாறைக்கு வந்த வாகனங்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.விழிப்புணர்வுவால்பாறை அடுத்துள்ள அட்டகட்டி வனத்துறை சோதனைச்சாவடியில் நகராட்சி சார்பில், கொரோனா குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.வால்பாறை நகராட்சி சமுதாய ஒருங்கிணைப்பாளர் வாசுகி தலைமையில் செக்போஸ்ட் வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி, கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X